dinamalar telegram
Advertisement

2 மாணவர்கள் கடலில் மாயம்

Share
மெரினா--கடலில் மாயமான இரண்டு மாணவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.சென்னை, ஆவடி கோதண்டகிரி விரிவு பகுதியைச் சேர்ந்த, ௧௨ம் வகுப்பு மாணவர் தனுஷ், 17, நண்பர்கள் 10 பேருடன், நேற்று மெரினா கடற்கரைக்கு வந்தார். கண்ணகி சிலை பின்புறம் கடலில் குளித்தனர்.அப்போது, பெரிய அலையில் தனுஷ் இழுத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து சக மாணவர்கள் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதேபோல், சைதாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவன் கோதண்டராமன் என்பவரும் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். கடல் அலையில் மாயமான மாணவர்கள் இருவரையும், கடலோர காவல் படையினர் படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement