dinamalar telegram
Advertisement

அடுத்தடுத்த கடைகளில் திருட்டு வேளச்சேரியில் வியாபாரிகள் பீதி

Share
வேளச்சேரி--வேளச்சேரி பகுதியில், அடுத்தடுத்த மூன்று கடைகளில் பூட்டை உடைத்து, பணம், பொருட்கள் திருடப்பட்டதால், வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர். வேளச்சேரி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 3வது பிரதான சாலையில், ஹெட்லைன் சலுான் கடை, சுயம்புலிங்கம் காய்கறி கடை, யோகி மொபைல் போன் கடை உள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு, மூன்று கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டது. இதில், சலுான் கடையில், 10 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாய் முடி திருத்தும் உபகரணங்கள் திருடப்பட்டன.காய்கறி கடையில், 3,000 ரூபாய், பப்பாளி, கருவாடு, கத்தி உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. மொபைல் போன் கடையில், இரண்டு பூட்டில் ஒன்று பலமாக இருந்ததால், பணம், பொருட்கள் தப்பின.வேளச்சேரி போலீசார், தெருவில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், நள்ளிரவு, 1:30 முதல், 3:30 மணிக்குள் நான்கு பேர், மூன்று கடைகளில் பூட்டை உடைத்து திருடுவது பதிவாகி உள்ளது.கடந்த ஆண்டு, அதே பகுதியில் உள்ள ஒரு மெடிக்கல், மளிகை கடையில், இதேபோன்று பூட்டை உடைத்து திருடப்பட்டது. வேளச்சேரி பகுதியில் வணிக நிறுவனங்களில் தொடர் திருட்டு நடப்பதால், வியாபாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.வேளச்சேரி போலீசார் கூறியதாவது: அபார வளர்ச்சி அடையும் வேளச்சேரி பகுதியை கண்காணிக்க, போதிய எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கவில்லை. இது குறித்து, மேல் அதிகாரிகளுக்கு தெரியும். இரவு ரோந்து பணிக்கு போலீஸ் பற்றாக்குறை உள்ளது. ரோந்து வாகனங்களும் போதிய எண்ணிக்கையில் இல்லை. எங்களால் முடிந்த அளவுக்கு, திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க முயற்சி செய்கிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement