கஞ்சா, துப்பாக்கியுடன் சுற்றிய மூவர் கைது
கும்மிடிப்பூண்டி--கும்மிடிப்பூண்டி அருகே, கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த மூவரை, போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம் சந்திப்பில், நேற்று முன்தினம் இரவு, சிப்காட் போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.அப்போது, ஒரு பைக்கில் வந்த மூன்று பேரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம், நாலரை கிலோ கஞ்சா, ஒரு துப்பாக்கி, இரு கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவர்கள், புதுகும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த நடராஜ், 30; திருச்சியைச் சேர்ந்த அருண்குமார், 40; சரண்ராஜ், 21, என விசாரணையில் தெரிய வந்தது. மூவர் மீதும் வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!