dinamalar telegram
Advertisement

எஜமான விசுவாசத்தில் போலீசாரை மிஞ்சிய ஆணையம்: அண்ணாமலை

Share
சென்னை : 'உள்ளாட்சி தேர்தலை பார்க்கும்போது, மாநில தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியினருக்கு காட்டிய எஜமான விசுவாசம், தமிழக காவல் துறையையே மிஞ்சிவிட்டது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று, தேர்தல் நாடகத்தின் இறுதி காட்சி உறுதி செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு வழங்கப்பட்டு விட்டது.அதை நிறைவேற்ற, மாற்று கட்சிகளின் வெற்றி வேட்பாளர்களை கண்டறிந்து, அவர்களின் வேட்பு மனுக்களை காரணமே இல்லாமல் தள்ளுபடி செய்த அவலம் மிக கேவலம்.

தேர்தல் ஆணையம் தி.மு.க.,வின் வெற்றிக்கான முன்னுரையை வேட்புமனு தாக்கல் தொடக்கத்திலேயே எழுத தொடங்கிவிட்டது. தி.மு.க., ஆட்சி அமைந்த பின், மிக விசுவாசியாக நடந்து கொள்வதில், தமிழக காவல் துறை போட்டியின்றி முதலிடத்தில் இருந்தது.தற்போது நடந்த முடிந்த உள்ளாட்சி தேர்தலை பார்க்கும்போது, தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியினருக்கு காட்டிய எஜமான விசுவாசம், காவல் துறையையே மிஞ்சிவிட்டது.
தேர்தல் ஆணையமும், காவல் துறையும் கைகோர்த்து கொண்டு, தி.மு.க.,வின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அவலத்தை, தமிழக மக்கள் முகம் சுளித்து பார்த்து கொண்டிருந்தனர். தோழமை அ.தி.மு.க.,வின் நிர்வாகிகளும், பா.ஜ., நிர்வாகிகளும் பரவலாக அனைத்து தொகுதிகளிலும் காரணங்கள் ஏதுமின்றி, கைது செய்யப்பட்டனர். ஓட்டு எண்ணும் மையங்களில் வெளிப்படையான தன்மை கடைபிடிக்கப்படவில்லை.

சில இடங்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்களையும், தோல்வியுற்றவர்களாக அறிவித்த கொடுமையும் நடந்தது. கடிமான சூழலில் கடமை தவறாமல் பணியாற்றிய பா.ஜ.,வின் தோழமை கட்சியின் தொண்டர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (63)

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  தோல்வி அடைந்த கட்சிகள் (தி மு க, காங்கிரஸ் உட்பட) சொல்வதைத்தான் இவரும் சொல்லியுள்ளார். அப்போதுதான் தொண்டர்கள் சோர்வடையாமல் இருப்பார்கள். இக்னோர் இட்.

 • DVRR - Kolkata,இந்தியா

  தலைப்பில் இரண்டு வரிகளும் சரியாக சொல்லப்பட்டிருக்கின்றது

 • periasamy - Doha,கத்தார்

  ஒற்றை ஒட்டு வெத்து வேட்டு ஜனநாயகம் பற்றி நீங்க அப்புறம் உங்க கட்சிக்கு எந்த தார்மிக உரிமையும் கிடையாது.

 • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

  வாய் உலரும், வார்த்தைகள் தடுமாறும், தடம் மாறும் , வேர்த்து விறுவிறுக்கும், நெஞ்சு படபடக்கும். தன மக்கள் மேலேயே கோபம் வரும். இதெல்லாம் தோல்வியின் அறிகுறிகள். பயப்படாதீங்க ஆட்டுக்குட்டி அண்ணாமலை இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியது இருக்கு. இப்போ நீங்க இருக்கிறது தமிழ் நாட்ல. கர்நாடகான்னு நினைக்காதீங்க ...

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பாஜக ஒரு ஓட்டு வாங்கியதை விட, அதைக்கண்டு தமிழ்நாடு அடைந்த அளவற்ற மகிழ்ச்சி முக்கியமானது. - 'தமிழ்நாடுடா' மொமெண்ட்‼️‼️‼️ தட்

Advertisement