dinamalar telegram
Advertisement

ஏர் - இந்தியாவின் கலை பொக்கிஷங்கள்; மக்கள் பார்வைக்கு வைக்க திட்டம்

Share
புதுடில்லி : 'ஏர் - இந்தியா' நிறுவனத்துக்கு சொந்தமான 2,000த்துக்கும் மேற்பட்ட விலை மதிப்பில்லா கலை பொக்கிஷங்களை, மத்திய கலாசார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றி, அதை தேசிய நவீன கலைக் கூடத்தில் மக்கள் பார்வைக்கு வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு நிறுவனமான ஏர் - இந்தியாவின் 100 சதவீத பங்குகளை, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 'டாடா குழுமம்' சமீபத்தில் கைப்பற்றியது. இதையடுத்து, ஏர் - இந்தியாவை நிறுவிய டாடா குழுமத்திடமே அந்நிறுவனம் சென்று சேர்ந்துள்ளது. ஏர் - இந்தியா துவங்கியதில் இருந்து, உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள், சிற்பிகளின் விலை மதிப்பில்லா கலை பொக்கிஷங்களை அந்நிறுவனம் வாங்கியது.

அவை, லண்டன், பாரிஸ், ரோம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ஏர் - இந்தியா அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏர் - இந்தியாவின் தலைவராக ஜே.ஆர்.டி. டாடா பதவி வகித்த போது, பிரபல ஓவியர்களின் ஓவியங்களைப் பெற்றுக் கொண்டு, அதன் மதிப்புக்கு இணையாக அவர்களுக்கு விமான பயண சீட்டை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அந்த காலகட்டத்தில் ஏராளமான கலைப் பொருட்கள் ஏர் - இந்தியாவுக்கு கிடைத்தன.
ஓவியர் எம்.எப்.ஹுசைன், அஞ்சலி இலா மேனன், ஜதின் தாஸ், எஸ்.ஹெச்.ராஸா, வி.எஸ்.கைதுந்தே, கே.ஏ.ஆரா உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் ஏர் - இந்தியாவில் உள்ளன.

மேலும், 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கற்சிற்பங்கள், மர வேலைப்பாடுகள், பல நுாறாண்டுகள் பழமையான கடிகாரங்கள் உட்பட 2,000த்துக்கும் மேற்பட்ட கலை பொக்கிஷங்கள் ஏர் - இந்தியா வசம் உள்ளன. இவற்றை கையகப்படுத்தி முறையாக பராமரித்து, பொதுமக்கள் பார்வைக்கு வைக்குமாறு கடந்த 2018 முதல், மத்திய கலாசார அமைச்சகத்திடம் ஏர் - இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது.

தற்போது, டாடா குழுமம் ஏர் - இந்தியாவை கையகப்படுத்தியதை அடுத்து, இந்த கலை பொக்கிஷங்களை மத்திய கலாசார அமைச்சகத்துக்கு மாற்றி, அவற்றை தேசிய நவீன கலைக் கூடத்தில் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தகவலை, தேசிய நவீன கலைக் கூடத்தின் இயக்குனர் ஜெனரல் அத்வைதா கடநாயக் உறுதி செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • sankaseshan - mumbai,இந்தியா

    கலய் பொக்கிஷங்களை அப்பு வாங்கி காட்சி பொருளாக்கி கோடி கோடியாக அள்ளலாம் முயற்சி செய்யவும்

  • Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா

    யூனியன் நிர்வாகத்தை கெடுக்காமல் இருக்க ஆண்டவனை வேண்டுவோம் .

  • Sankare Eswar - tuas,சிங்கப்பூர்

    இனி ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்காது

  • ஆரூர் ரங் -

    ஒரு TV பேட்டியில் சிதம்பரம்🙄 கூறியது..தனியார் மயமாக்கல் அவசியமே. தனியார் நிறுவனங்கள் மிகவும் திறமையுள்ள நிறுவனங்கள் அதனால் அரசு உடமைகளை தனியார் மையம் ஆக்குவதில் தவறு இல்லை,.ஆக சிதம்பரம் காங்கிரசு ஆட்சியில் சொன்னதைதானே🥲 தற்போது நஷ்டத்தை காட்டி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையம் ஆக்கி நஷ்டத்தை சரி செய்து வருகிறார் நமது பாரத பிரதமர் மோடி அவர்கள். ஏர் இந்தியாவில் நஷ்டம் 157000 கோடி யும் நாம் வரிப்பணத்தில்தான் ஈடு செய்யப்படும். இனியும் சுமைதாங்கி யாக இருக்க நம்மால் இயலாது

  • அப்புசாமி -

    கலைப்பொக்கிஷம் டாட்டாவுக்கு வெக்க இடமில்லை. மத்திய அரசுக்கு தானம்.

Advertisement