dinamalar telegram
Advertisement

மீண்டும் தலைதுாக்குகிறது சுவரொட்டி கலாசாரம்

Share
Tamil News
சிந்தாதிரிப்பேட்டை-'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தின்படி, சென்னை மாநகரை அழகுபடுத்தும் விதமாக, மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சுற்றுச்சுவர், மேம்பால துாண்கள், சுரங்கப் பாலங்கள் என பொது இடங்களை அலங்கோலப்படுத்தி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை, ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர்.சுவரொட்டி ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.தொடர்ந்து, பொது இடங்களில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டன.இந்நிலையில், மீண்டும் சுவரொட்டி கலாசாரம் தலைதுாக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை, அருணாச்சலம் சாலையில் உள்ள சுவர்களில், நேற்று ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

அவற்றை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:சென்னையில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டுவோர் மீது, சட்டப்படி, மூன்று மாதம் சிறை அல்லது 200 ரூபாய் அபராதம் மட்டுமே விதிக்க முடியும். தண்டனை கடுமையாக இல்லாத காரணத்தினால், சுவரொட்டி ஒட்டுவதை தடுக்க முடியவில்லை.எனவே, சென்னையில் சுவரொட்டி ஒட்டுவதற்கு வரி விதிக்க வேண்டும் அல்லது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement