dinamalar telegram
Advertisement

மாணவர் தொடர் ஓட்டம் கலெக்டர், எஸ்.பி., வாழ்த்து

Share
Tamil News
விழுப்புரம்-கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தொடர் ஓட்டத்தில் ஈடுபடும் மாணவருக்கு கலெக்டர் மற்றும் எஸ்.பி., வாழ்த்து தெரிவித்தனர்.சென்னை, தாம்பரம் சாய்ராம் மெட்ரிகுலேஷன் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர் சர்வேஷ், 9; இவர், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் இணைந்து உருவாக்கிய தரமான கல்வி, நிலையான வளர்ச்சியை வலியுறுத்தியும்; 2030ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து மக்களும் பட்டினியின்றி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் எனவும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 750 கி.மீ., தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.காந்தி ஜெயந்தியன்று கன்னியாகுமரியில் துவங்கிய அவர், நேற்று 600 கி.மீ., துாரத்தைக் கடந்து விழுப்புரம் வருகை தந்தார்.கலெக்டர் மோகன் மற்றும் எஸ்.பி., ஸ்ரீநாதா ஆகியோர் மாணவர் சர்வேைஷ வரவேற்று, வாழ்த்துக்கூறி அனுப்பி வைத்தனர்.சாய்ராம் கல்விக்குழுமத் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து, செயல் இயக்குனர் முனுசாமி உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement