dinamalar telegram
Advertisement

அமித் ஷா தலைமையில் பா.ஜ., வார் ரூம் கூட்டம்

Share
புதுடில்லி :அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்க, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், பா.ஜ., 'வார் ரூம்' கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது.பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ளன.

வெற்றி



இதில், பஞ்சாபை தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 'இதில், மூன்று மாநிலங்களில் சிரமம் இன்றி பா.ஜ., வெற்றி பெற்றுவிடும்' என, அக்கட்சி நம்பிக்கையுடன் உள்ளது. உ.பி.,யில் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் லக்கிம்பூர் வன்முறை சம்பவம், பா.ஜ., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யை சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவர்கள் சிலர், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை டில்லியில் சமீபத்தில் சந்தித்தனர். நான்கு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரசாரம்



உ.பி.,யில் 100 நாட்களில் 100 நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது. பல்வேறு சமூக மக்களை கவர, பொது கூட்டங்கள், வீடு வீடாக சென்று பிரசாரம், இளைஞர் மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது.இந்நிலையில், முக்கிய கட்சி விவகாரங்கள் குறித்து விவாதித்து உடனுக்குடன் முடிவெடுக்க, டில்லியில் பா.ஜ.,வுக்கு 'வார் ரூம்' எனப்படும் அவசர கட்டளை அலுவலகம் உள்ளது.இங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்து முக்கிய விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (17)

  • Rajamani K - Chennai,இந்தியா

    இரண்டு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தில் ஆட்சியப் பிடிப்பதற்கு குடி மகன்களும், கிரிப்டோ கிருத்துவர்களும் தான் காரணம்.

  • SUBBU - MADURAI,இந்தியா

    வார் ரூம்னா என்னவென்றே தெரியாமல் இங்கு பொது பெயரில் கருத்தை போடும் எங்க ஊர் மதுரை ஜெய்ஹிந்த்புரம், அப்றம் Suri - Chennai, ரெண்டு மூர்க்கன்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இன்னும் சில நாட்களில் NIA தமிழ் நாட்டில் இந்திய தேச விரோதிகளையெல்லாம் சல்லடை போட்டு அள்ள போகிறது. அதில் முதல் இடம் மதுரைக்கா அல்லது கோவைக்கா என்பதுதான் சஸ்பென்ஸ்.அதனால் பாத்து சூதானமா இருந்துக்கங்கப்பா?மொதல்ல மண்டையில இருக்க குல்லாவ மறைச்சுட்டு பம்மி பதுங்கிர்றது நல்லது.

  • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

    பாஜக முன்பை விட அதிக இடங்களில் ஜெயிக்க வேண்டும், ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற வேண்டும், சமுக விரோதிகள் தேசதுரோகிகள் சமூக வலைதளங்களில் கதரி அழுவதை பாத்து தேச பக்தர்கள் பாத்து மகிழ வேண்டும். ஜெய் ஹிந்த்.

  • Hari - chennai,சவுதி அரேபியா

    நாங்க இன்னும் அதிகமாக உங்களிடமிருந்து சப்தத்தை எதிர்பார்க்கிறோம்.....

    • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

      அவனே DMK வை காபி அடிச்சி war Room bed ROOM என்று அறிவிக்கிறான் இதில் இன்னும் அதிகம் பார்க்கலாம் DMK ஏதாவது செய்தால் அதை காபி அடிச்சி செய்கிறோம் என்று சாணக்கிய பூபதி சொல்லுவார்

    • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

      அவரே ஸ்டாலின் போட போட்டில இந்த TN பக்கம் வரவே மாட்டேன் என்று மறைந்து இருக்கார் பாவம்

    • Soumya - Trichy,இந்தியா

      380.கோடி ஓவா குடுத்து இரவல் மூளை வாங்கின விடியலுக்கு வார் ரூம் அஹ் பத்தி என்ன தெரியும்

    • Ibrahim - Nagai,இந்தியா

      கவலைப்படாதே, பொய்ப்பெயரில் அலறும் திருட்டு கழக கயவாளியே. இன்னும் சில நாட்களில் உன் இச்சித்தாளின், இஞ்சிதான்னா குரங்கை போய்விடுவான்.

  • Suri - Chennai,இந்தியா

    ஒத்த வோட்டு விஷயத்த கூட இந்த வார் ரூமில் விவாதியுங்கள், ப்ளீஸ்.

    • Ibrahim - Nagai,இந்தியா

      பொய் பித்தலாட்ட திமுக பொறுக்கிகள் இப்படித்தான் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுவான்கள். பாவம் தமிழகம், இந்த நாதாரிகளிடம் சென்றுவிட்டது.

    • Ibrahim - Nagai,இந்தியா

      பொய்ப்பித்தலாட்டம் திமுக இப்படித்தான் பொய் சொல்லியே மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பறிப்பான்கள்.

Advertisement