dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: கணக்கு சரியாக இருக்காதே!

Share

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:மகிழ்நன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்திலுள்ள முக்கிய கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கிய தங்க நகைகளை உருக்கி, வங்கியில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்ய, தி.மு.க., அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

கோவில் நகையை, வங்கி 'லாக்கரில்' வைத்திருந்தால் ஆளுங்கட்சியினர் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். அதிகாரிகள் துணையுடன் அங்கு போலி நகைகளை வைத்து, தங்கத்தை களவாடி விடுவர். அங்கு இருப்பது தங்கமா, 'கவரிங்'கா என்பதை யார் அறிய முடியும்? ஆட்சி மாறினால், ஒரு வேளை குற்றம் நடந்தது தெரிய வரலாம். அப்படி இருந்தாலும், அது தொடர்பான வழக்கு 100 ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும். கோவில் நகையை திருடியோர் சுகபோகமாக வாழ்ந்து, மறைந்து விடுவர்.

அந்த நகையை உருக்கி விற்று, பணமாக்கி, வங்கியில் 'டிபாசிட்' செய்தாலும் சிக்கல் வரும்.உருக்கிய நகையின் எடையை குறைத்து காட்டுவர். நகை மதிப்பீட்டில் குளறுபடி செய்து, குறைந்த தொகைக்கு விற்பனை செய்து மோசடி செய்வர். இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதிகாரிகள் சொல்வது தான் கணக்கு!அதாவது, கோவிலில் இருந்த 100 கிலோ தங்கத்தை உருக்கியபோது, அதில் வெறும் 10 கிலோ தான் தேறியது என கணக்கு காட்டினால், யார் ஆய்வு நடத்த முடியும்?

நேர்மையான அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தமிழகத்தில் சல்லடை போட்டு அல்லவா தேட வேண்டியது உள்ளது! 'சிவன் சொத்து' என்ற பயம், நாத்திக கட்சியான தி.மு.க.,விடம் எப்படி இருக்கும்? நம் அரசியல்வாதிகள் ஆலத்திலும், கோலத்திலும் நுழைந்து தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்வதில் கை தேர்ந்தோர்.அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இருப்பதே, கோவில் நகைகளுக்கு பாதுகாப்பு!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (48)

 • DVRR - Kolkata,இந்தியா

  கொல்கத்தாவில் ஒரு வேடிக்கை Flurys, Park Street, Kolkata 4 அடி துர்கா சிலை தின்னும் சாக்கலேட்டில் செய்து காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றது????சரி என்ன செய்வார்கள் இதை போய் நதியில் கரைப்பார்களா எல்லா களிமண் சிலைகளை கரைப்பது போல ???இல்லை பிய்த்து அதை தின்பார்கள்??? அப்போ இதே மாதிரி ஏசு சிலையை கிறிஸ்துமஸுக்கு செய்வார்களா இல்லவே இல்லை செய்தால் கிருத்துமஸ் தாத்தாவை செய்தால் செய்யலாம் ஆனால் ஏசுவை செய்ய மாட்டார்கள் ஏன் பிய்த்து தின்பார்கள் என்று அப்போ இந்து கடவுளை இப்படி செய்யலாம் இது தான் இன்றைய நடப்பு திராவிட இந்து எதிர்ப்பாளர் கிறித்தவ முஸ்லிமகளின் வெறிச்செயல்கள்

 • DVRR - Kolkata,இந்தியா

  நானும் அக்கனவே பலமுறை சொல்லிவிட்டேன் இங்கிருந்து தங்க நகைகள் செல்லும். 2000 கிலோ அதில் முத்து பவளம் வைரம் வைடூரியம் இருக்கும் அதை பிரித்து எடுத்தோம் ஆகவே நகை எடை குறைந்தது என்று சொல்வர் அது சரிதானே என்று டப்பா அடிக்கும் கூட்டம் எல்லா திராவிட நாட்டு மூலையிலும். கடசிசியில் அதில் சில 9 காரட் சில 14 காரட் சில 22 காரட் ஆகவே அதை 24 காரட் தங்கக்கட்டிகளாக மாறும் போது .....என்று கதை அடித்து 1000 கிலோ அடித்து விடும் பிறகு அந்த முத்து பவளம் வைரம் வைடூரியம் சுருட்டி விடும்.சாதாரணன் இதை கேட்டாலும் யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். கூட்டுக்களவாணிகள் அவர்களுக்குள் பங்கு பிரித்தலில் சண்டை வந்தால் தான் இவர்கள் தகிடுதத்தம் வெளியே வரும் இல்லை அப்படியே அமுக்கி விடுவார்கள் அமைதியாக. ஆகவே இன்று முதல் ஒரு ஓத்திகை செய்யுங்கள் இந்துக்களே (மற்ற ஜந்துக்களை பற்றி நம்மக்கு கவலை இல்லை) இனிமேல் நீங்கள் கொடுக்க விருப்பும் நகை பணம் ஏதாயினும் ஒரு உடையாக அதாவது பட்டு சேலை...... என்று அதற்கான கட்டணம் ஏதேனும் (இங்கு ஒரு சேலை கொடுத்தல் அதை கடவுளுக்கு அணிவிக்க ரூ 300 கட்டணம்)கொடுத்து விடுங்கள் பணம் நகை கொடுக்கவே வேண்டாம் உண்டியலில் போடவேண்டாம். இந்த திருட்டு திராவிட கட்சி பூராவுமாக ஒழிந்த பின் செய்யலாம்

 • DVRR - Kolkata,இந்தியா

  செய்தியில் சொன்னது அனைத்தும் உண்மை ஆனால் டாஸ்மாக் நாட்டு "குடி"மக்கள் தான் அதே போதையில் இருக்கும் போது அவர்களுக்கு என்ன சொன்னால் என்ன ஒரு மண்ணும் விளங்கப்போவதில்லை டாஸ்மாக் நாடு உருப்படவும் போவதில்லை

 • sankaseshan - mumbai,இந்தியா

  Suri, அயோத்தி கோவில் நிலம் கையக படுத்திட்டத்தில் தகிடுதத்தம் என்னன்னு சொல்லுல்பா நாங்களும் தெரிஞ்சுக்கறோம் இங்கே இருந்து கொண்டு புருடா விடாதே ஆதாரம் இருந்தால் அவிழ்த்து விடு

  • Suri - Chennai,இந்தியா

   ஒரே நாளில் ஒரே இடத்தை இரு முறை மிக மிக அதிக விலை கொடுத்து அறக்கட்டளை பேரில் பத்திர பதிவு செய்தது எல்லாம் செய்தித்தாள்களில் வந்தது நீர் அறியவில்லை என்றால் உம்மை அறிவிலி என்று கூரிடமுடியுமா?

 • sankar - Nellai,இந்தியா

  "நேர்மையான அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தமிழகத்தில் சல்லடை போட்டு அல்லவா தேட வேண்டியது உள்ளது"- இது நிதர்சனமான உண்மை

Advertisement