dinamalar telegram
Advertisement

100 கோடி தடுப்பூசி டோஸ்; வரும் வாரத்தில் சாதனை

Share
புதுடில்லி :'நாட்டில் கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி 'டோஸ்' அடுத்த வாரத்தில் 100 கோடியை எட்டி சாதனை படைக்கும்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது.இதுவரை மொத்தம் ௯௬ கோடியே ௭௦ லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில்18 வயதுக்கு மேற்பட்டோரில் 73 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது; 30 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.அடுத்த வாரத்தில் 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி இந்தியா சாதனை படைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • Raja Raman - Chennai,இந்தியா

    அம்மை, காலரா, கொரோனா pandemic problem.. தடுப்பூசி போடுவது அரசின் கடமை .. பெட்ரோல் விலை உயர்வு அரசின் மெத்தனம்.. தட்டிக் கேட்பது மக்களின் உரிமை

    • Anvardeen - chennai,இந்தியா

      அதே போல் முறையாக வருமான வரி செலுத்துவதும், வாங்கும் பொருளுக்கு ரசீது தரவேண்டும் என்று நிர்பந்திப்பதும் மக்களாகிய உங்களின் கடமை .. ஓஊசி மட்டுமே ஓட கூடாது

  • Raja Raman - Chennai,இந்தியா

    அம்மை, காலரா போல் கொரோனாவவக்கும் தடுப்பூசி போடுவது அரசின் கடமை..பெட்ரோல் விலை எப்படி இருந்தாலும் கொடுப்பார்கள் என்பது அரசின் மெத்தனம்..தட்டிக் கேட்பது மக்களின் உரிமை.. ராஜா ராமன்.

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    இப்போது எங்கே போனார்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள். தடுப்பூசி பற்றி வதந்தி பரப்பியவர்கள். ஊடகங்களுக்கு அதிமுக வை வைத்து பிழைப்பு நடத்துகின்றன. நாட்டில் வேறு செய்தியே இல்லை.

  • vns - Delhi,யூ.எஸ்.ஏ

    தடுப்பூசிக்கு பணம் கொடுக்கமாட்டார்கள் ஆனால் பெட்ரோல் விலையைப்பற்றி வாய் கிழிய குற்றம் கூறுவார்கள் விஷங்கள்.

Advertisement