dinamalar telegram
Advertisement

இலங்கை அதிபருடன் நரவானே பேச்சு

Share
Tamil News
கொழும்பு:இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.

இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை அதிபரிடம் நரவானே ஆலோசித்தார்.இதன்பின் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவை நரவானே சந்தித்தார். இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் அளித்து வரும் பயிற்சிக்காக நரவானேவிடம் மகிந்தா ராஜபக்சே நன்றி தெரிவித்தார். தொடர்ந்து இலங்கை வெளியுறவு செயலர் ஜெயந்த் கொலம்பாகேவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் பற்றி ஆலோசித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Vinay - Toronto,கனடா

    இந்திய தளபதி அங்க இருக்கும் போதே 23 மீனவர்கள் கைது, இது ... சொல்லுற மாதிரி இருக்கு..

Advertisement