dinamalar telegram
Advertisement

கவர்னர் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு ஏன்?

Share
Tamil News
சென்னை :தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என, அக்கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும், இதற்காக சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இணைந்து, ஒருமனதாக சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளன.இதற்கு பா.ஜ., மட்டும் ஆதரவு அளிக்கவில்லை. இந்த சட்ட மசோதா கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கவர்னர் இன்னும் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கவில்லை.

இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, 45 நிமிடங்கள் வரை நீடித்தது. முதல்வருடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் சென்றனர்.இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என, அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட மசோதாவை, விரைவில் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும்படி, கவர்னரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தெரிகிறது.


தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருவதாகவும், அதற்கு தீர்வு காணக் கோரியும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள், நேற்று முன்தினம் கவர்னரை சந்தித்து புகார் அளித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, தன் சந்திப்பின்போது, கவர்னரிடம் முதல்வர் எடுத்துரைத்ததாகவும் தெரிகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

 • raja - Cotonou,பெனின்

  அப்போ சட்டம் ஒழுங்கு சரியில்லை உண்மைதான்... அதை சரிப்படுத்த விடியல் முதல்வர் என்ன செஞ்சிகிட்டு இருக்காருன்ன சொல்ல போயி இருக்காரு.. சொல்றீங்க....

 • duruvasar - indraprastham,இந்தியா

  ஜல்ஜீவன் திட்டத்தில் மாநில அரசு அளிக்கவேண்டிய 50% பங்களிப்பிலிருந்து விலக்கு, வீட்டுக்கு விலக்கு, ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கிலிருந்து விலக்கு, பதிய கல்வி கொள்கையிலிருந்து விலக்கு என இப்படி விலக்கு கேட்டு தமிழர்கள் எல்லாவற்றிலுமிருந்து விலக்கி வைக்கபட வழிவகுக்கிறார்கள். இப்பொழுதே கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்மாநிலங்களைவிட நிறைய விஷயங்களில் தமிழ்நாடு பின்தங்கியிருக்கிறது. முதல் மாநிலம், சிறந்த முதல்வர் என தனக்குத்தானே கீரிடம் வைத்துக் கொள்வதை விடுத்து கள உண்மையை உணருங்கள். சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் அளவுக்கு அதிகமாக நடுநிலைமை கடைபிடிக்கிறார்கள். என்ன செய்ய.

 • RajanRajan - kerala,இந்தியா

  வெட்டி வேலை நித்திரைக்கு கேடு. என்னமா உழைக்கிறானுங்கப்பா கல்வி வியாபாரிங்களுக்காக. அதுக்காக மாணவர்களி திறன் மிக்க எதிர்காலத்தை ஒழிக்க தயாராகிட்டன் திராவிடன். ஆயிரம் பேரை கொல்லும் அரை வைத்தியனை உருவாக்க முயலும் திமுக திருட்டு வித்தைகள். உசார் மாணவர்களே போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்...

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  எப்போதுமே தூங்கி வழியிற துரோகி புகழ் துரைமுருகன் இந்த சந்திப்பின் பொது தூங்காமல் இருந்தது அதிசயமாக பார்க்கப்பட்டது ...

Advertisement