dinamalar telegram
Advertisement

மஹாத்மா காந்தி சொல்லித்தான் சவார்கர் கருணை மனு கொடுத்தார்: ராஜ்நாத் சிங்

Share
Tamil News
புதுடில்லி : 'மஹாத்மா காந்தி வலியுறுத்தியதால் தான், சுதந்திர போராட்ட வீரர் வினாயக் தாமோதர் சவார்கர், பிரிட்டிஷ் அரசிடம் கருணை மனு கொடுத்தார். 'ஆனால், சவார்கர் குறித்து தொடர்ந்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

விடுதலைபத்திரிகையாளரும், தகவல் ஆணையருமான உதய் மகுர்கர் எழுதியுள்ள வீர் சவார்கர் குறித்து புத்தகம் வெளியீட்டு விழா, டில்லியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:சவார்கர் குறித்து பொய்த் தகவல்கள் காலம் காலமாக பரப்பப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், விடுதலை செய்யுமாறு கருணை மனு கொடுத்ததாக மீண்டும் மீண்டும் பொய்யை கூறி வருகின்றனர்.
சிறையில் அடைக்கப்பட்டவர்கள், விடுதலை செய்யுமாறு கேட்பது இயற்கைதான்.ஆனால், வீர் சவார்கர், தனக்காக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. மஹாத்மா காந்தி கூறிய தால் தான், கருணை மனுவை அவர் கொடுத்தார்.

அஹிம்சை வழியில் நடந்து வரும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் சவார்கர் விடுதலை செய்யப்பட வேண்டும் என, மஹாத்மா காந்தி விரும்பினார்.ஆனால், மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கொள்கை உள்ளவர்கள், சவார்கர் குறித்து தொடர்ந்து பொய்களை பரப்புகின்றனர். பொதுவுடைமை எதிர்ப்பாளராக அவரை பொய்யாக சித்தரித்துள்ளனர்.

வரலாறுகொள்கையில் வித்தி யாசம் இருக்கலாம். ஆனால், சுதந்திரத்திற்காக போராடிய மிகச் சிறந்த தலைவரை சிறுமைபடுத்தக் கூடாது. மிகச் சிறந்த தேசியவாதியான சவார்கர், நாட்டின் முதல் ராணுவ யுக்தி நிபுணராகவும் இருந்தார்.அவருக்கு முக்கியத்துவம் தந்திருந்தால், நாடு இரண்டாக பிரிந்திருக்காது.இவ்வாறு அவர் பேசினார்.ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சுக்கு, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.'வரலாற்றை திரிக்க முயற்சிக்கிறார்கள். இது தொடர்ந்தால், மஹாத்மா காந்தியை தள்ளி வைத்து, சவார்கரை தேசத் தந்தையாக அறிவித்து விடுவார்கள்' என, அவர் கூறிஉள்ளார்.

திட்டமிட்ட சதி!நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:நாடு சுதந்திரம் அடைந்த பின், சவார்கர், சுவாமி விவேகானந்தர் உட்பட சிலரை இழிவுபடுத்தும் திட்டமிட்ட சதி பிரசாரம் நடந்தது. தற்போதும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மற்றும் ஹிந்து மகாசபையை உருவாக்கிய சவார்கர் குறித்து தொடர்ந்து பொய்யான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.நாடு ஒற்றுமையுடன் இருப்பதை விரும்பாத வர்களே, சவார்கரை எதிர்க்கின்றனர்.


தேசியவாதத்தை ஆதரித்த அனைவருக்கும் சம உரிமையை வலியுறுத்தியவர் சவார்கர்.நம்மிடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும், ஒற்றுமையுடன் இருப்போம்; இதுதான் இந்தியா. உதாரணத்துக்கு பார்லி.,யில், கட்சியினர் கடுமையாக மோதிக் கொள்வர். ஆனால், வெளியே சேர்ந்து டீ குடிப்பர். ஹிந்துத்துவா, தேசியவாதம் குறித்து சவார்கர் போல் அனைவரும் சத்தமாக பேசியிருந்தால், இந்த நாடு பிளவுபட்டிருக்காது.இவ்வாறு அவர் பேசினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

 • Amal Anandan - chennai,இந்தியா

  அப்போ சர்க்காருக்கு சுயபுத்தி இல்லை?

 • Nagercoil Suresh - India,இந்தியா

  இவரு பழைய நினைப்பிலே இருக்கிறார்...சுதந்திரதினம் கொண்டாடுவதே 100வது ஆண்டோடு நிறுத்த வேண்டும், இன்னொரு வழியில் நாம் அடிமைகளாக வாழ்ந்ததை சுட்டிக் காட்டுகிறது. குடியரசு தினத்தையும் சுதந்திர தினத்தையும் சேர்த்து இந்தியா டே என பெயர் வைத்து ஒரே நாளாக பரேடை அடிபொழியாக நடத்தவேண்டும்...

 • sankaseshan - mumbai,இந்தியா

  அந்தமான் சிறை வளாகத்தில் சவர்க்கரை நினைவு கூற நினைவு தூண் இருந்தது மத்திய மந்திரியாக இர்ந்த தேசதுரோகி மணி சங்கரஅய்யர் இதை இடித்து தள்ளினான் ,மோடி ஆட்சியில் மீண்டும் கட்டபட்டது

 • Suri - Chennai,இந்தியா

  உள்துரையே புருடா விடறது என்று முடிவு செய்துவிட்டால் யார் தான் நாட்டை காப்பாற்றுவது?

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  காந்தியும் நேருவும் வெள்ளைக்காரர்களால் VIP போன்று நடத்தப்பட்டார்கள. ஆனால் சாவர்க்கர் அப்படி அல்ல. அவரது குடும்பமே உருக்குலைக்கபட்டது. அவரது சகோதரரும் சிறையில் பல ஆண்டுகள் கொடுமை படுத்தபட்டார். அவரது அந்தமான் சிறை வாசத்தில் அவரது மனைவியும் இறந்து போனார். சாவர்க்கரின் தேச பக்தியை பற்றி காந்தி எங் இந்தியா என்ற பத்திரிக்கையில் எழுதினார். சவர்க்கரை பற்றி இணையத்தில் படியுங்கள் கருத்து எழுதுங்கள். அவர் மேல் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல. நாட்டிற்காக தனது குடும்பத்தை தன்னை பணயம் வய்த்த தியாக சீலர். இதை எந்த அரசியலும் சாராமல் அவரை பற்றி படித்து விட்டு எழுதுகிறேன்.

Advertisement