dinamalar telegram
Advertisement

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்திற்கு நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்

Share
பாஸ்டன்:லக்கிம்பூரில் விவசாயி கள் நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்று உள்ள நிர்மலா சீதாராமன், ஹார்வர்ட் கென்னடி பல்கலையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார். அப்போது, உ.பி., லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்து நான்கு பேர் பலியான சம்பவம் பற்றி, பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காதது குறித்து கேட்கப்பட்டது.

வழக்கு பதிவுஅதை மறுத்து, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:லக்கிம்பூர் வன்முறை சம்பவம் கண்டனத்திற்கு உரியது. இது தொடர்பாக, மத்திய இணையமைச்சரின் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணையில் உண்மை தெரியவரும். இந்தியாவில், பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் பல வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன.

ஆனால், உ.பி.,யில் பா.ஜ., ஆட்சி நடப்பதால் தான் விவகாரம் பெரிதாக்கப்படுகிறது.இதை, பிரதமர் அல்லது நான் சார்ந்துள்ள பா.ஜ.,வுக்கான ஆதரவு குரலாக கருத வேண்டாம். இந்தியாவின் குரலாக கருத வேண்டும். நான் இந்தியாவுக்காக பேசுவேன். ஏழைகளின் நீதிக்காக குரல் கொடுப்பேன்.

மூன்று வேளாண் சட்டங்கள், அனைத்து தரப்பினரிடமும் விவாதிக்கப்பட்டு, வேளாண் துறை அமைச்சர் பதில் அளித்த பின், லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டது. பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உ.பி.,யின் சில பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தான், இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.அதற்கான வலுவான காரணங்களைக் கேட்டால், குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை ஒழிந்து விடும் என்கின்றனர்.

தானியங்கள் கொள்முதல்பிரதமர் மோடி தலைமையிலான ஏழு ஆண்டு கால ஆட்சியில் தான், விவசாயிகளிடம் இருந்து அதிக உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டு, ஒவ்வொரு விவசாயியும் அதிக தொகையை பெற்றுள்ளார். இதை, பஞ்சாப், ஹரியானா விவசாயிகளே ஒப்புக் கொண்டுஉள்ளனர். சாட்சிக்கு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட உரையாடல் உள்ளது.

பின் எதற்காக விவசாயிகள் போராடுகின்றனர் என்பது தான் புரியவில்லை. அவர்களுடன் பேச, வேளாண் துறை அமைச்சர் இன்று கூட தயாராக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

அமர்தியா சென் மீது தாக்குஅமெரிக்காவில், மொசாவர் - ரஹ்மானி மையத்தில் நடந்த விவாதத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது ஹார்வர்டு பல்கலை பேராசிரியர் லாரன்ஸ் சம்மர்ஸ், பா.ஜ., ஆட்சியை, பொருளாதார நிபுணர் அமர்தியா சென் உள்ளிட்டோர் விமர்சிப்பது பற்றியும், இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது குறித்தும் கேட்டார்.

அதற்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில்:அறிஞர்கள் தற்போது உண்மையின் அடிப்படையில் விமர்சிப்பதை விட்டு, தங்கள் சொந்த விருப்பு, வெறுப்பின் பேரில் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. அமெரிக்காவில் ஒரு மாகாணத்தில் நடக்கும் சம்பவத்திற்கு, அந்த மாகாண கவர்னர் தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, அதிபர் பொறுப்பேற்க முடியாது.

ஆனால், இந்தியாவில், பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எது நடந்தாலும், பிரதமர் மோடியை குற்றஞ்சாட்டுவது வாடிக்கையாகி விட்டது. மோடியை இழித்தும், பழித்தும் விமர்சிப்பவர்கள் கூட சுதந்திரமாக உலா வருவதை பார்க்கலாம். ஆனால், பா.ஜ., அல்லாத மாநில அரசையும், முதல்வரையும் விமர்சிப்போர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளுகின்றனர். இதை, இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்போர் புரிந்து கொள்ள வேண்டும். துாங்குவோரை எழுப்பலாம்; துாங்குவது போல நடிப்போரை எழுப்ப முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

நிலக்கரி தட்டுப்பாடு இல்லை!இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுஉள்ளதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. ஏற்கனவே, இதற்கு துறை சார்ந்த அமைச்சர் விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த வதந்திகளுக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுஉள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை; தவறானவை. நாட்டில் எதுவும் பற்றாக்குறையாக இல்லை. வரும் காலங்களிலும், நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படாது. அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற தேவையான அனைத்து வழிகளையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement