dinamalar telegram
Advertisement

ஆர்யன்கான் ஜாமின் மனு இன்று (அக்.14) விசாரணை

Share
மும்பை: சொகுசு கப்பலில் போதை விருந்து விவகாரத்தில் கைதாகியுள்ள நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு ஜாமின் மனு மீதான விசாரணை இன்று (அக்.,-14) நடக்கிறது.


மஹாராஷ்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் ஒருசொகுசு கப்பல் ஒன்றில் சிறப்பு விருந்தில் போதை பொருள் பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதை பொருளை பறிமுதல் செய்தனர்.


இந்த வழக்கில் கைதான ஆர்யன் கான்,23 மும்பை கில்லா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு (அக்.11) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜாமின் வழங்க மறுத்தார். மீண்டும் ஜாமின் கோரிய மனு நேற்று(அக்.13) விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி விசாரணையை இன்று (அக்.14) ஒத்தி வைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    ஆர்யன் கானுக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டும். அப்பதான் இந்தமாதிரி போதை விருந்து உபயோகிப்பவர்களுக்கு அது ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கும். ஆர்யன் கானை அந்த பழக்கத்திற்கு ஆளாக்கிய அவன் அம்மாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டும்.

  • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

    சும்மா பூச்சி காட்டுற ஒரு முதல்வரை வச்சிக்கிட்டு என்னத்த கிழிக்க போறீங்களோ?

Advertisement