dinamalar telegram
Advertisement

பஞ்., இடைத்தேர்தலில் பம்ப் ஆப்பரேட்டராக பணிபுரிந்தவர் வெற்றி

Share
Tamil News
அவிநாசி: கருவலுார் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில், அதே ஊராட்சியில், 'பம்ப் ஆப்பரேட்டராக' பணிபுரிந்தவர் வெற்றி பெற்று தலைவரானார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கருவலுார் ஊராட்சி தலைவராக இருந்த மாரிமுத்து, கடந்தாண்டு உடல் நலக்குறைவால் இறந்தார். அதே ஊராட்சியில், 10 ஆண்டுகளாக, பம்ப் ஆப்பரேட்டராக பணிபுரிந்த முருகன், தன் பணியை ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிட்டார்.

அவருக்கு, தி.மு.க., கூட்டணி ஆதரவளித்தது. அ.தி.மு.க., கூட்டணி ஆதரவுடன் முருகேசன் போட்டியிட்டார். இதில், முருகன் 1,571 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். முருகேசன் 1,337 ஓட்டுகள் பெற்றார்.

முருகன் கூறுகையில், ''குடிநீர் குழாய் ஆப்பரேட்டராக, மக்களுக்கு நிறைவாக சேவை செய்தேன். அதனால், என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். ஊராட்சி மக்களுக்கு அனைத்து வசதிகளை செய்து கொடுக்க முயற்சிப்பேன்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    அய்யய்யோ நெத்தியில் குங்குமம் , யோவ் சீக்கிரம் உங்கள் தலைவர் பாணியில் அழித்து விட்டு குல்லாய் போட்டு எங்கள் பிதாமகர் முன்னாள் மண்டி போடுங்க , அப்போதுதான் உங்களது முழு பகுத்தறிவும் வெளிப்படும்

Advertisement