ADVERTISEMENT
சென்னை: ‛‛தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.,1ம் தேதி முதல் 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்,'' என்று தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அதன்படி, கூட்ட நெரிசலின்றி பொதுமக்கள் சென்று வர ஏற்பாடு செய்யப்படும். வரும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து பொதுமக்கள் பலர் சொந்த ஊர் செல்வர்.
முக்கியமாக தென்மாவட்ட மக்கள் அதிகமானோர் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வர். அதேபோல் சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பலர் அவர்களது சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம்.
இதை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்காக 17,719 சிறப்புப் பேருந்துகளும் இயக்கபடும். முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளாக இருக்கும். வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணமே பெறப்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்த்து நவ., 1ம்தேதி முதல் தங்கள் ஊருக்கு சென்று வரலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அதன்படி, கூட்ட நெரிசலின்றி பொதுமக்கள் சென்று வர ஏற்பாடு செய்யப்படும். வரும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து பொதுமக்கள் பலர் சொந்த ஊர் செல்வர்.

இதை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சொந்த ஊர்களில் இருந்து திரும்புவதற்காக 17,719 சிறப்புப் பேருந்துகளும் இயக்கபடும். முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளாக இருக்கும். வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணமே பெறப்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்த்து நவ., 1ம்தேதி முதல் தங்கள் ஊருக்கு சென்று வரலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அதிமுக ஆட்சியில் இருந்தால் பேருந்துஇயக்கி நாடு முழுதும் தோற்று பரவிவிட்டது என்று ஊடகங்க்களும் செர்ந்து அரசியல் செய்தது இன்று நோய் தடுப்பதைவிட வருமானம் பெரிது ....நிதி அமைசர் இதை தான் இனி வருமானம் ஒண்றெ குறீக்கோள் என்றார் போலும்