திருநெல்வேலி: பா.ஜ., பிரமுகரை தாக்கிய நெல்லை தி.மு.க., எம்.பி., ஞானதிரவியம் மீது வழக்குபதிவு செய்ய வலியுறுத்தி நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் ஞானதிரவியம் உட்பட 30 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆவரைகுளம், ஞானதிரவியத்தின் சொந்த ஊர். அங்கு பா.ஜ.,பிரமுகர் பாஸ்கர், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக நேற்று உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டார். அவரை ஞானதிரவியம், மகன்கள் தாக்கினர். பாஸ்கர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரவு அவரை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், ஞானதிரவியம் மீது வழக்குபதியக்கோரி திருநெல்வேலி ஜங்ஷன் பாரதியார் சிலை முன் இரவு 10:00 மணிக்கு
தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.மாவட்ட தலைவர் மகராஜன் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பொன் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்ட்டு திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஞானதிரவியம், மகன்கள் சேவியர்ராஜா, தினகர் உள்ளிட்ட 30 பேர் மீது பணகுடி போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொன்ராதாகிருஷ்ணனை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இரவில் பொன் ராதாகிருஷ்ணன் போலீஸ் ஸ்டேஷனிலேயே விரிப்பு எதுவுமில்லாமல் வெறும் தரையில் தூங்கினார். பின்னர் போராட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!