dinamalar telegram
Advertisement

திமுக எம்.பி.,மீது வழக்குபதிவு கோரி பொன்னார் இரவில் மறியல் போராட்டம்

Share
Tamil News
திருநெல்வேலி:பா.ஜ.,பிரமுகரை தாக்கிய தி.மு.க.,எம்.பி.மீது வழக்குபதிவு செய்ய வலியுறுத்தி இரவில் பொன் ராதாகிருஷ்ணன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.


திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ஆவரைகுளம் தி.மு.க.,எம்.பி.,ஞானதிரவியத்தின் சொந்த ஊராகும்.அங்கு பா.ஜ.,பிரமுகர் பாஸ்கர், அ.தி.மு.க.,கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை ஞானதிரவியம் மற்றும் அவரது மகன்கள் தாக்கியுள்ளனர். காயம்பட்டவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

நேற்று இரவு அவரை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தி.மு.க.,எம்.பி.,மீது வழக்குபதிவு செய்யக்கோரி திருநெல்வேலி ஜங்ஷன் பாரதியார் சிலை முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தை துவக்கினார். அவருடன் மாவட்ட தலைவர் மகராஜன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் தி.மு,க.,எம்.பி.,மீது வழக்கு பதிவு செய்துவிட்டோம் என தகவல் தெரியும் வரை விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். இரவு 10:00 மணி முதல் போராட்டத்தை தொடர்ந்தார்.

இதனிடையே நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உட்பட அவரது மகன்கள் சேவியர்ராஜா, தினகர் மற்றும் திமுகவினர் 30 பேர் மீது பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement