dinamalar telegram
Advertisement

பெட்ரோல் பங்க் பணியாளர் மகள் ஐ.ஐ.டி.,யில் இணைந்து அசத்தல்

Share
Tamil News
திருவனந்தபுரம்:கேரளாவில் 'பெட்ரோல் பங்க்'கில் பணிபுரியும் நபரின் மகள், கான்பூர் ஐ.ஐ.டி.,யில் இணைந்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கேரளாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் ராஜகோபாலன். இவரது மகள் ஆர்யா, நாட்டின் மிக உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான கான்பூர் ஐ.ஐ.டி.,யில் எம்.டெக்., பிரிவில் சமீபத்தில் சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தன், 'டுவிட்டர்' பக்கத்தில் குறிப்பிட்டுஉள்ளதாவது:ஆர்யா ராஜகோபாலனின் எழுச்சியூட்டும் கதையை இதில் பகிர்கிறேன். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ராஜகோபாலனின் மகளான ஆர்யா, கான்பூர் ஐ.ஐ.டி.,யில் இணைந்துஉள்ளார். இது எங்களை பெருமைப்பட வைத்துஉள்ளது. ஆர்யாவுக்கு வாழ்த்துகள்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் கீழ் அவர், 'தன் தந்தை ராஜகோபாலை மட்டும் அல்லாமல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் துறையைச் சேர்ந்த அனைவரையும், ஆர்யா பெருமைப்பட வைத்து உள்ளார்' என, குறிப்பிட்டு உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (15)

  • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

    Congrats to Aarya.

  • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

    2021 லேயும் இது போல ஆர்சரியம் அடைய வைப்பது இந்தியாவில் மட்டும் தான் ஆகா உயர் கல்வி என்பது "" ஆர்யா, கான்பூர் ஐ.ஐ.டி.,யில் "" சேர்ந்தார் என்று தான் இனி வரும்காலம் சொல்லபோகுது

  • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,பிரான்ஸ்

    எல்லாம் பேர் ராசி ஹ்ம்ம்

  • Ram Pollachi -

    பாராட்டலாம், சீராட்டலாம் அமைச்சரே ! இலவச கழிப்பறை, இலவச காற்று கிடையாது எரிபொருளின் அளவு சரியில்லை அதற்கு உண்டான பில் கேட்டால் தாமதபடுத்தப்பட்டு தருவார்கள். இதை கவனித்தால் என்ன குறைந்தால் போய் விடுவீர்கள்?

  • ponssasi - chennai,இந்தியா

    இதில் பெற்றோரும் ஆசிரியரும் மட்டுமே பெருமையடைய வேண்டியவர்கள்.

    • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

      தமிழ் நாட்டில் அந்த பெருமை கூட பட முடியாது . நாங்கதான் அறிவார்ந்த குழந்தைகளை சம சீர் செய்து நாலெட்ஜ் குரியவனா குழந்தையாக மாற்றி முடிந்தால் கட்சி கொடிக்கம்பம் நட பிளேஸ் வைக்க உபயோக படுத்துறோம் . எந்த அப்பனும் பொறுப்பா பிள்ளைகளை கவனித்து விட கூடாது என்று பொறுப்பா சாராயம் கொடுக்குறோம் . இன்னும் பல நல்ல திட்டங்கள் இருக்கு தமிழக அரசிடம்

Advertisement