2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காட்பாடி : காட்பாடி அருகே, 2 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வேலுார் மாவட்டம் பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையில் வருவாய்த்துறையினர், காட்பாடி அருகே கழிஞ்சூரில் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டூர் அங்காளம்மன் கோவில் அருகே முள்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், ஆந்திரா மாநிலம், சித்துாருக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!