dinamalar telegram
Advertisement

அழிந்து வரும் பட்டியலில் உள்ள அபூர்வ இன தவளை கண்டுபிடிப்பு

Share
Tamil News
மூணாறு: மூணாறு அருகே அழிந்து வரும் வனஉயிரின பட்டியலில் இடம்பெற்றுள்ள 'எல்லோ பெல்லிட் புஷ் ப்ராக்' எனும் அபூர்வ இன தவளை கண்டு பிடிக்கப்பட்டது.

'ரெக்கோ போரைட்' இனத்தைச் சேர்ந்த அந்த வகை தவளை மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகத்தில் ஆனைமலையில் மட்டும் காணப்படும். அது வால்பாறையில் 1882ல் முதன்முதலாக கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பிறகு அங்கு 2017, 2018ம் ஆண்டுகளில் தென்பட்டன.


நீர் வீழ்ச்சிகளின் அருகில் உள்ள காடுகளில் வாழும் தன்மை கொண்டது. அதன் வயிறு பகுதியில் மஞ்சள் நிறம் காணப்படுவதால் 'எல்லோ பெல்லிட் புஷ் ப்ராக்' என பெயரிட்டு அழைக்கப்படுகிறது. அழிந்து வரும் வன உயிரின பட்டியலில் இடம் பெற்றுள்ள அந்த வகை தவளை வன ஆர்வலர்களால் மூணாறு அருகே ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சியையொட்டியுள்ள காட்டில் முதன்முறையாக கண்டு பிடிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • duruvasar - indraprastham,இந்தியா

    யாழ்ப்பாணம் அருகில் காடுகளில் பதுங்கி அண்ணணுடன் தங்கியிருந்த நாட்களில் இதை பார்த்த தமிழர்கள் இருப்பார்கள். விசாரித்து பாருங்கள்.

Advertisement