dinamalar telegram
Advertisement

திருச்சி கோவில்களில் துர்கா சுவாமி தரிசனம்

Share
Tamil News
திருச்சி,:முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், வெக்காளியம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, இரவு பாத யாத்திரையாக வந்து, திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் சிறப்பு பூஜையில் பங்கேற்று, தரிசனம் செய்தார். இரவு, திருச்சி சுற்றுலா மாளிகையில் தங்கிய அவர், நேற்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்த விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்றார்.


பின், உறையூர் வெக்காளியம்மன் கோவிலிலும் சுவாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த துர்காவிடம், பட்டாச்சார்யார்கள் ஒரு மனு அளித்தனர். அதில், 'ஸ்ரீரங்கம், உறையூர், அன்பில் மற்றும் திருவெள்ளறை போன்ற இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில், அர்ச்சகர்கள், பண்டாரிகள், அரையர்கள், ஸ்தானிகம் மற்றும் ஊழியர்கள் இறைப்பணி செய்கின்றனர்.'இவர்கள், ஆத்மார்த்தமாகவும், பரம்பரையாகவும், கோவில் பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டு,


எவ்வித குறையும் இன்றி கைங்கர்யம் செய்து வருகின்றனர். 'தொடர்ந்து, இவர்களின் வாரிசுகளும் கைங்கர்யம் செய்வதற்கு, முதல்வரிடம் அனுமதி பெற்றுத் தர வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement