ADVERTISEMENT
சென்னை: ‛‛கொரோனா தொற்று குறைந்து பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற நிலை வரும்போது வாரத்தில் 7 நாட்களும் கோவில்கள் திறக்கப்படும்,'' என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் ரூ.3 கோடி அளவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. கோயில் நந்தவனத்தை மேம்படுத்தி பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம். ரூ.50 லட்சம் மதிப்பில் மரத்தேர் உருவாக்க உள்ளோம். கோயில் குளத்தை சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் அழகுப்படுத்த உள்ளது.
கோயில்களுக்கு சமஸ்கிருத பெயர்களுடன் தமிழ் பெயர்களும் சேர்ந்து இடம்பெற முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கக்கோரி பா.ஜ., சார்பில் இன்று போராட்டம் நடத்துகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தை தேடிச் சென்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
அதுவும் கோவில்கள் திறந்திருக்கும் நாளான இன்று போராட்டம் நடத்தி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். அரசியலில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் எப்போதுமே இதுபோன்ற போராட்டங்களை நடத்த தான் செய்யும். இந்த ஆட்சியை எதிர்த்து போராடுவதற்கு போதிய காரணங்கள் எதுவும் இல்லை. கொரோனா தொற்று குறைந்து பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற நிலை வரும்போது வாரத்தில் 7 நாட்களும் கோவில்கள் திறக்கப்படும். அதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
போராட்டம் நடத்தும் பா.ஜ., கட்சியினருக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். இது நாங்கள் எடுத்த முடிவல்ல. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தான் இதை செய்கிறோம். எங்கெல்லாம் கூட்டம் கூடுமோ அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதை கருத்தில் கொண்டு தான் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்துமத கோவில்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மத கோவில்களுக்கும் இந்த கட்டுப்பாடு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் ரூ.3 கோடி அளவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. கோயில் நந்தவனத்தை மேம்படுத்தி பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம். ரூ.50 லட்சம் மதிப்பில் மரத்தேர் உருவாக்க உள்ளோம். கோயில் குளத்தை சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் அழகுப்படுத்த உள்ளது.

அதுவும் கோவில்கள் திறந்திருக்கும் நாளான இன்று போராட்டம் நடத்தி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். அரசியலில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் எப்போதுமே இதுபோன்ற போராட்டங்களை நடத்த தான் செய்யும். இந்த ஆட்சியை எதிர்த்து போராடுவதற்கு போதிய காரணங்கள் எதுவும் இல்லை. கொரோனா தொற்று குறைந்து பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற நிலை வரும்போது வாரத்தில் 7 நாட்களும் கோவில்கள் திறக்கப்படும். அதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

அங்கு ஒரு ராகுல் காந்தி காங்கிரசை ஒரு வழியாக அழித்துக்கொண்டிருக்கிறார் . இங்கு தி. மு. க. வுக்கு பல ராகுல் காந்திகள். நல்ல காலம் தமிழ்நாட்டை நோக்கி ஜெட் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. தமிழகம் சுத்தமாகிவிடும் வீழ்வது தி.மு.க வாக இருக்கட்டும் . வாழ்வது தமிழகமாக இருக்கட்டும்.