உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
சி. ரமேஷ் குமார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முகலாயர் ஆட்சி காலத்தில் கோவில்கள் சிதைக்கப்பட்டு, அதன் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும், கோவில்களில் கடும் கட்டுபாடுகளுடன், சிறு கொண்டாட்டமும் இல்லாமல் கடவுளை தரிசிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
முகலாயர் மன்னர்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்த போதும், ஹிந்து தர்மத்தை காக்க பல்லாயிரம் பேர் தங்கள் இன்னுயிரை தந்தனர். ஆட்சியாளர்களின் கொடுமை தாங்காமல், பலர் அவர்களின் மதத்திற்கு மாறி தங்களை காத்துக் கொண்டனர். ஆங்கிலேய ஆட்சியின் போதும், கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டது. ஹிந்து மத வழிபாட்டுக்கு பல்வேறு தடைகள் விதித்தனர். அவர்கள் சார்ந்த மதத்திற்கு மாறுவோருக்கு சலுகைகள் பல கொடுத்தனர்.

* கோவில்களுக்கு மன்னர், மக்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வைர நகையை கொள்ளை அடிப்பது
* கோவிலின் தினசரி பூஜை மற்றும் சடங்குகளை நிறுத்துவது
* கடவுள் விக்ரகங்களை சேதப்படுத்துவது மற்றும் கடத்துவது
* கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு மற்றும் வரி விதிப்பது
* மத மாற்றம் செய்வது
* கோவிலில் பூஜை செய்வதை தங்கள் வாழ்க்கையாக கொண்டோரை தண்டித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்குவது...
இப்படி இன்னும் கொடுமைகளை, முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் ஹிந்துக்கள் அனுபவித்தனர். நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம்... ஹிந்துக்கள் இப்போதும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஆங்கிலேயர், முகலாயர் கால ஆட்சி போலவே, இப்போதும் நடக்கிறது.
கோவில்கள் சிதைக்கப்படுகின்றன. செல்வம் கொள்ளை அடிக்கப்படுகின்றது. ஹிந்து மத வழிபாட்டிற்கு மட்டும் இடையூறு ஏற்படுத்தப்படுகிறது.
ஹிந்து கடவுள்களை அவமானப்படுத்துவது தொடர்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டணம் என்ற பெயரில் வரி விதிக்கப்படுகிறது. இதோ இப்போது, கோவிலில் உள்ள நகையை அபகரிக்கப் போகின்றனர். தமிழகத்தில் ஹிந்து மதம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என தெரியவில்லை. ஏனெனில், ஹிந்துக்களிடம் போராட்ட குணம் மறைந்து விட்டது. உணர்வும், வலிமையும் இல்லாத அனைத்தும் அழிந்து போகும் என்பதை, ஹிந்துக்கள் உணர வேண்டும்.
வாசகர் கருத்து (185)
உண்மை. நாம் நம் புராண இதிஹாஸங்களை சரிவர கற்பதில்லை. நம் குழந்தைகளுக்கு ஒரு சில தேவார திருவாசக ப்ரபந்தங்கள் கூட தெரிவதில்லை. நம் கோயில்களின் முக்யத்வம் புரியவில்லை. காரணம் இந்த "திருச்சபை முஸ்லீம் கழகம்" (திமுக) வந்ததில் இருந்து நம் தமிழ் பாடத்திட்டங்கள் சிதைக்கப்பட்டு விட்டன. அரசியல்வாதிகள் பிறப்பால் இந்துவாக இருந்தும், அந்நிய மதவாதிகளின் கைப்பாவையாக - ஓட்டுக்காக, மற்றும் துட்டுக்காக - செயல் படுகின்றார்கள். மக்களும் நெற்றியில் விபூதி, திருமண் இட்டுக் கொண்டு, அவைகளை கொச்சை படுத்து வோருக்கு ஓட்டு போடுகிறார்கள். ஒரு அண்ணாமலை அல்லது ராஜாவால் மட்டும் என்ன செய்து விட முடியும்.மேலும் க்ருத்துவ பாதிரியார்கள் இஸ்லாமிய இமாம்களும் திமுக மேடையேறி ஓட்டுப் போடச் சொல்கிறார்கள். ஆனால் நம் மதத்தலைவர்கள், மடாதிபதிகள் வேத பண்டிதர்கள் போன்றோர் நம் மதத்தை காக்கும் பணியில் மௌனம் கலைக்க வேண்டும். நம்மை நம் கலாச்சாரத்தை கொச்சைபடுத்தும் திமுக தலைவர்கள் இல்லத்துக்கு சென்று ஆசீர்வாதம் செய்வதை நிறுத்த வேண்டும். கோவில் சொத்துக்களை, நகைகளை, பூஜை முறைகளை காக்க முனைந்து இறங்க வேண்டும். நம் சுயமரியாதையை காக்க உண்மையான நேர்மையான இந்து பெரியார்கள் முன் வேண்டும்..
நேத்திக்கு பிரான்ஸ் நாட்டில் பாஸ்டருங்க பண்ணிய அட்டகாசம் வெளிவந்து எல்லா வெளிநாட்டு ஊடகளிலும் பேசப்படுது ஆனா நம்ம ஊரு ஊடகங்கள் மோடி ஓய்க கோஷம் தான்.
True'
In the background BJP probably trying to buy ADMK. That's how BJP always grow in southern states by buying people from other parties. But in Tamil Nadu, BJP keep failing in that front. Now ADMK dont have a star power and leaders will not be spending money because they just looted them. ADMK will be aligning with BJP and in two years, there will not be ADMk party in Tamil Nadu
நம் முன்னோர்கள் முஸ்லீம்களையும் கிறித்துவ வெள்ளையனையும் எதிர்த்து செய்த போர்களையும் ஹிந்து மதத்திற்காக செய்த தியாகங்களையும் ஹிந்துக்களை கொலை செய்ததையும் தங்கள் வாரிசுகளுக்கு சொல்லி வளர்க்காததால் வந்த வினை