dinamalar telegram
Advertisement

வாட்ஸ் அப் வராமல் வாடிய அந்த இரவு! பேஸ்புக், இன்ஸ்டாகிராமையும் இழந்த இளசுகள் சொல்வது என்ன

Share
Tamil News
நம்ம வீட்ல கரன்ட் கட்டான உடனே பக்கத்து வீட்லயும் கட் ஆயிடுச்சான்னு பார்த்து 'அப்பாடா'ன்னு நிம்மதி பெருமூச்சு விடும் நாம், போன்ல பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கி பீதி கிளப்பினால், சும்மாவா இருப்போம்.
நட்புகள், உறவுகளுக்கு போன் போட்டு 'வருதா, வருதா'ன்னு கேட்டு இம்சை அரசர்களாக மாறி விடுவோம்... அப்படி ஒரு சம்பவம் நேற்று முன் தினம் உலகளவில் நடந்தது. இரவு 9:00 முதல் அதிகாலை 4:00 மணி சமூகவலைதளங்கள் முடங்கின.அந்த ஒரு நாள் இரவு எப்படி இருந்தது என சிலரிடம் கேட்டோம் ...அவர்கள் கூறியது:

பெரிதாக எதுவும் தோன்றவில்லைநம் அலைபேசியில் தான் நெட்ஒர்க் இல்லை என்று நினைத்தேன். நான் இரவு 10:00 மணிக்குள் துாங்க போகும் ஆள். 9:00 மணிக்கு பிறகு அலைபேசியை எடுக்கவும் மாட்டேன். சமூக ஊடகத்தில் இரவில் ரொம்ப தேடமாட்டேன். எனவே எனக்கு பெரிதாக எதுவும் தோன்றவில்லை. பிரச்னை இருந்ததும் தெரியவில்லை. காலை 5:00 மணிக்கு 'மெசேஜ்'வந்திருந்தது. எனவே 'ஓகே' என்று விட்டு விட்டேன்.வெளிநாட்டில் இருந்து பேசமுடியவில்லை என்றெல்லாம் நேற்று பலர் சொன்னார்கள்.-ரேகா சிவன், ஊடகவியலாளர், சென்னை.

* உலகமே பிரச்னையில் இருந்ததுநான் வாட்ஸ் அப் தான் பயன்படுத்துகிறேன். அகில இந்திய வானொலியின் ரெயின்போ எப்.எம்., ஆர்.ஜெ.,வான நான் உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப்பில் தான் தகவல்களை தெரிவிக்க வேண்டும். நேற்றுமுன்தினம் இரவு வாட்ஸ் அப் முடங்கியதும் முக்கியமான தகவல்கள் தெரிவிக்க முடியவில்லை. பிறகு தான் உலகமே பிரச்னையில் இருந்தது தெரிந்தது. நான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாததால் நார்மலாக தான் இருந்தேன். - என். திரிவேதா, ஆர்.ஜெ.,சென்னை.

இன்ஸ்டாகிராம் என் பொக்கிஷம்சமூக வலைதளங்கள் முடங்கியதை தாமதமாக தான் பார்த்தேன். போனை சுவிட்ச் ஆப் செய்து பார்த்தேன். யூ டியூப்பில் பார்த்த பின் தான் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் முடங்கியதை நம்பினேன். இதனால் நண்பர்கள் பலர் டெலிகிராம் பதிவிறக்கி பயன்படுத்த துவங்கினர். காலை மீண்டும் இன்ஸ்டா வந்ததும் தான் ஏதோ பொக்கிஷம் கிடைத்தது போல் உணர்ந்தேன். - ஒய்.ஆஷிகா, நடிகை, மதுரை.

வெளியே வர ஒரு வழிஇப்போதெல்லம் சமூக வலைதளங்களை பணத்திற்கு ஈடாக மதிக்கிறோம். ஒரு நாள் முடங்கினால் கூட உலகமே நின்று விடும். அந்த அளவிற்கு நம் அன்றாட தகவல் பரிமாற்றம், முக்கிய வேலைகள் அதற்குள் முடங்கி கிடப்பது தான் இதற்கு காரணம். இதற்கான மாற்று கண்டுபிடிப்பது தான் கஷ்டம். ஆனால், இதில் இருந்து வெளியே வர ஒரு வழி உருவாக்க வேண்டும். இதனால் நான் பெரியளவில் பாதிக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். - ஏ.ஜாஸ்மின், ஐ.டி.,பணியாளர், திருப்பூர்.

ரொம்ப துாரம் சென்றதாக உணர்ந்தேன்ஜிம் ஒர்க்கவுட் முடித்து விட்டு போன் எடுத்து பார்த்தால் வாட்ஸ் அப் வேலை செய்யவில்லை. வீட்டிற்கு சென்று போனில் இருந்த பைல்ஸ், போட்டோக்கள் எல்லாம் டெலிட் செய்தேன். குடும்பத்தினர் கூறியதும் தான் சமூக வலைதளங்கள் முடங்கியது தெரிந்தது. முக்கிய பைல்களும் டெலிட் ஆனதால் காலையில் அதை தேடி எடுக்க படாதபாடு பட்டேன். அந்த ஒரு நாள் ரொம்ப துாரம் போனது போல் உணர்ந்தேன். - எஸ்.சோபியா ஏன்ஜலியன், ஐ.டி., அனலிஸ்ட், கோவை.

அட்மினாக தவித்தேன்வாட்ஸ் அப்பில் ஒரு பைல் லோட் ஆகாமல் இருந்ததால் நார்மல் பிரச்னை என நினைத்தேன். பின் நண்பர்கள் போன் செய்து கூறியதும் முடங்கியது தெரிந்தது. இன்ஸ்டா, வாட்ஸ் அப், பேஸ்புக் ஒரே நிறுவனம் என்பதால் அதை பயன்படுத்தும் பலர் தகவல் பரிமாற முடியாமல் தவித்தனர். 15 நிமிடத்திற்கு ஒரு முறை சரியாகி விட்டதா என செக் பண்ணி கொண்டே இருந்தேன், நண்பர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் நான் அட்மினாக இருக்கிறேன். மாடல் போட்டோஸ் அனுப்ப முடியாமல் தவித்தேன். - பி.தீபக், மாடல், பாலக்காடு.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • பெரிய ராசு - தென்காசி ,இந்தியா

    ஒரு மாசத்துக்கு செயல்படாமல் போகணும் இவனுக தொலையனும் ..

Advertisement