dinamalar telegram
Advertisement

தடுத்து நிறுத்தம்; உணர்ச்சி பொங்கிய பிரியங்கா

Share
லக்னோ: உ.பி.,யில் நடந்த வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்., தலைவர் சோனியாவின் மகளும், காங்., பொதுசெயலருமான பிரியங்கா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்நேரத்தில் பிரியங்கா போலீசாருடன் கடும் வாக்குவாத்ததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உ .பி., மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் துணை முதல்வருக்கு, வேளாண் சட்டங்கள் தொடர்பாக கருப்பு கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர். அந்நேரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாயினர்.அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 8 விவசாயிகள் பலியாகினர்.
Tamil News
Tamil News
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். இப்பகுதி நோக்கி அரசியல் தலைவர்கள் படையெடுத்து வந்தால் மேலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரியங்கா தனது ஆதரவாளர்களுடன் லக்கிம்பூர் நோக்கி வந்தார். ஆனால் போலீசார் அவரை மாவட்டத்திற்குள் அனுமதிக்கவில்லை. பெண் போலீசார் சுற்றி வளைத்தனர். இந்நேரத்தில் போலீசாருடன் பிரியங்கா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"मैं उन किसानों से महत्वपूर्ण नहीं हूं, जिनको तुमने मारा है।"@priyankagandhi जी के ये भाव बता रहे हैं कि वो किस दर्द और पीड़ा के साथ किसानों से जुड़ी हुई है और रातभर सड़कों पर उतरी है।
न्याय तो अब होकर रहेगा जोगी जी...#PriyankaGandhiwithFarmers#लखीमपुर_किसान_नरसंहार pic.twitter.com/nc45BN9D9S


— Congress (@INCIndia) October 4, 2021

கொலை வழக்குப்பதிவுவன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். இதன்படி விபத்தை ஏற்படுத்திய அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அகிலேசுக்கு வீட்டுக்காவல் ?சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டின் அருகே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவரை வெளியே வர விடாமல் போலீசார் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (54)

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  பிரச்சினைகளை பெரிதாக்குவதால் இனி இவருக்கு "பிரச்சினை பிரியங்கா" என்ற பெயர் வைக்கப் படும்.

 • GANESUN - Delhi,இந்தியா

  சிந்து: அக்கா இப்போ நிலவரம் சரியாயிடிச்சு எல்லோரும் நம்ப கட்சி பாஞ்சாப் பிராபளத்த மறந்துட்டாங்க..நீங்களும் அண்ணனும் கில்லாடிங்க அதுதான் உங்க கூடவே இருப்பேன்னேன்.

 • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

  புரிந்து கொள்ளக்கூடியதே அதிகாரத்தில் இல்லாததால் குடும்பம் பல ஆண்டுகளாக மரியாதை இழந்து தவிக்கிறது கட்சியிலும் மரியாதை இல்லை அதன் காரணமாகவும், இந்த வயதிற்கே உரிய சில பர்சனல் பிரச்னைகள் காரணமாகவும் மனச்சிதைவு ஏற்பட்டிருக்கலாம் பாவம் ட்ரீட்மெண்ட் உடனடித் தேவை

 • Shankar - Hawally,குவைத்

  பதவிக்காகவும், பணத்திற்காகவும் இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். தீபாவளி பண்டிகைக்கு சிலநாட்களுக்கு முன்பு எப்படி பட்டாசுகள் விற்கப்படுகிறதோ, பொங்கலுக்கு சிலநாட்களுக்கு முன்பு எப்படி கரும்பு விற்கப்படுகிறதோ அதுபோலத்தான் இவரைப்போன்றோரும், தேர்தல் நேரம் நெருங்கும்போது தான் மக்கள் நினைவு வரும்.

 • RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ

  அடடா இன்று பரிதாபமான நிலையில் ஆண்ட (அதே சமயம் திருடி-த்தின்ற) குடும்பம்

Advertisement