சென்னையில் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த குலாம் நபி ஆசாத், நேற்று காலை முதல்வர் ஸ்டாலினை, அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில், தன் மனைவியுடன் சென்று சந்தித்தார். அப்போது, தி.மு.க., - எம்.பி.,க்கள் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஸ்டாலின் மனைவி துர்கா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஸ்டாலினை சந்தித்த பின், குலாம் நபி ஆசாத் கூறியதாவது: முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், முதல்முறையாக அவரை சந்தித்தேன். இது, நட்பு ரீதியான சந்திப்பு. எங்களது இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான உறவு, 43 ஆண்டுகளுக்கு மேலானது. நான் இருக்கும் வரை, இரண்டு குடும்பங்களுக்கும் இடையேயான உறவு தொடரும்.

புறக்கணிப்பு ஏன்?
குலாம்நபி ஆசாத், தமிழகம் வரும் போது, தமிழக காங்., நிர்வாகிகள் அவரை வரவேற்கச் செல்வர்; அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வர். முக்கிய நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசுவதும் வழக்கம். தற்போது, காங்., தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கி உள்ளோரில், குலாம்நபி ஆசாத் முக்கியமானவர் என்பதால், கட்சி நிர்வாகிகள் யாரும், அவரை வரவேற்க செல்லவில்லை; சந்திப்பதையும் தவிர்த்து விட்டனர் என்று காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
நியமன "M.P" (ராஜ்யசபா) சீட்டுக்காக இவ்வளவு நாடகம்