அட்டகாசமாக நடனமாடிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ; பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி
புதுடில்லி: மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ. நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரதமர் மோடி, அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் விவேகானந்தா கேந்திரா வித்யாலயா திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கஜலாங் கிராமத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தார். அங்கு வசிக்கும் சஜோலாங் இன மக்கள் மேள தாளங்கள் முழங்க, மத்திய அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது. இசைக்கு தகுந்தவாறு, கிரண் ரிஜிஜூ சிறப்பாக நடனமாடினார். இதன் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது.

இந்நிலையில், இந்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்திருக்கும் பிரதமர் மோடி, 'நம் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ சிறந்த நடன கலைஞர். அருணாச்சல பிரதேசத்தின் துடிப்பான கலாச்சாரத்தை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது' என பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
வாசகர் கருத்து (16)
நம்ம அமைச்சர்கள் மஞ்சு விரட்டில் கலந்து கொண்டு காளைகளை அடக்குவார்களா?
பெரிய நீரோ வே பிடில் வாசிக்கும்போது சின்ன நீரோ டான்ஸ் ஆடுவதில் என்ன ஆச்சரியம்....
மக்கள் வாழ்க்கை ஆட்டம் கொண்டிருக்கையில் உங்களுக்கு எகத்தாள ஆட்டம் ஒரு கேடா?
இது என்ன பிரமாதம் ,மஹாநுபாவருக்கு குச்சிப்புடி ,பரதநாட்யம் ,கதகளி ,மோஹினியாட்டம் ,ஒடிசி எல்லாம் ப்ரமாதமாயிட்டு வெறும் ,கேட்டோ
ஐயோ நாராயண ஏதோ கொஞ்சம் உள்ளே போட்டுக்கிட்டு உடம்பை ஆட்கின்ற மாதிரி தான் இருக்கின்றது எனக்கு