dinamalar telegram
Advertisement

அரசு அலுவலகங்களில் ரெய்டு: சிக்கியது வெறும் ரூ.27 லட்சம்

Share
Tamil News
தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் உள்ள, ஆர்.டி.ஓ., மற்றும் சார் - பதிவாளர் அலுவலகம் என, பல்வேறு அரசு அலுவலகங்களில், நேற்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி, 26.99 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை வருவதால், அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், பணம், பரிசு பொருள் என வாரி குவித்து வருவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் என, 38 மாவட்டங்களிலும், சார் - பதிவாளர், ஆர்.டி.ஓ., எனப்படும் வட்டார போக்குவரத்து, நகர்புற வளர்ச்சி என பல்வேறு அரசு அலுவலகங்களில், காலையில் இருந்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு, நேற்று மாலை 3:00 மணியளவில் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இடைத்தரகர்கள்



இரவு 8:45 வரை நடத்தப்பட்ட சோதனையில் 26.99 லட்சம் ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது. சென்னையில் மட்டும், மயிலாப்பூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், அம்பத்துார், தாம்பரம், திருவான்மியூர் என ஆறு சார் - பதிவாளர் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், வில்லிவாக்கம், மயிலாப்பூரில் மட்டும், லஞ்சப் பணம், 42 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு - கரூர் சாலை கொள்ளுகாட்டு மேட்டில், கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்படுகிறது. இங்கு ஆர்.டி.ஓ.வாக பிரதீபா பணியாற்றுகிறார். துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகமும் செயல்படுகிறது. ஆணையராக ரவிச்சந்திரன் உள்ளார்.
வாகன பதிவு, புதுப்பித்தல், லைசென்ஸ் பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, இடைத்தரகர்கள் வாயிலாக, லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது.

அனுமதி வழங்க லஞ்சம்



நேற்று பகல் 12:30 மணியளவில், ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், துணை ஆணையர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்; 1.31 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.
திருவண்ணாமலையில், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில், புதிய மனை வரன்முறை அங்கீகாரம், மருத்துவமனைகள் கட்டுதல் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்க லஞ்சம் பெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சோதனை நடத்தி 2.80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இரு மாநில எல்லையில் உள்ள ஜூஜூவாடியில், தேசிய நெடுங்சாலை போக்குவரத்து சோதனை சாவடியில், அதிகாலை 4:30 மணியில் இருந்து சோதனை நடத்தி 2.58 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'அரசு அலுவலகங்களில், லஞ்சம் வாங்குபவர்கள் குறித்து, பொது மக்கள் தகவல் தரலாம். லஞ்ச ஒழிப்பு போலீஸ் தொடர்பு எண்கள், அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன' என்றனர். -நமது நிருபர் குழு -

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (13 + )

  • Venkat - Chennai,இந்தியா

    பக்கத்துல இருக்கற மெக்கானிக் கடை, டீயை கடை slum ல ரைட் பண்ணுங்க . க kkநகர் rto லஞ்ச கணக்கு maintain பண்றவங்க செகண்ட் கண்ட பைக கடை காசி theatre கிட்ட இருக்காரப்போ ஆபீஸ்ல என்ன கிடைக்கும்

  • S. Narayanan - Chennai,இந்தியா

    இது நம்பும்படி இருக்கிறதா

  • அப்புசாமி -

    எல்லோரும் டிஜிட்டல்க்கு மாறிட்டாங்க... கொஞ்ச நாளையில் பிட் காயினுக்கு மாறிடுவானுங்க...

  • elakkumanan - Naifaru,மாலத்தீவு

    அரசு ஊழியம் நா சும்மாவா... அரசு ஊழியர் நா சும்மாவா...ஏதோ டி வடை சாப்பிட வச்சிருந்த சிறுவாட்டு காசை கைப்பற்றி இம்பூட்டு கூச்சல் எதுக்கு யா.....ஒவ்வொரு நாளும் பல கோடிகளில் புழங்குகிறது...திராவிட வளர்ச்சி என்றால் சும்மாவா....இந்த லச்சணத்துல, இவனுகளுக்கு மாற்றி மாற்றி சம்பள உயர்வு... ஊழியம் என்றாலே கோடிகளில் தான் இருக்கும்போல...இந்த அரசு ஊழியத்துக்கு சங்கம் ஒரு கேடு..அந்த சங்கத்துக்கு கட்சிகளின் ஆதரவு கேட்டிலும் கேடு...

  • Girija - Chennai,இந்தியா

    அவிக சொல்லிட்டு தானே வராக

Advertisement