dinamalar telegram
Advertisement

ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர் மீது பணமோசடி குற்றச்சட்டு; அமலாக்கத்துறை விசாரணை

Share
டில்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மூத்த சகோதரர் அக்ராசாய்ன் கெலாட். தொழிலதிபரான இவர் தற்போது டில்லி அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளார். விவசாய உர ஏற்றுமதியில் நடந்த முறைகேடுகள் மற்றும் பண மோசடி குறித்து அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பண மோசடி தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் அக்ராசாய்ன் கெலாட் இடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 11 மணி அளவில் தனது வழக்கறிஞருடன் கெலாட் டில்லி வந்து சேர்ந்தார். முன்னதாக இதுகுறித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்றும் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
ராஜஸ்தானில் கெலாட் மேற்கொண்டு வந்த தொழில்கள் ஏராளம். இந்த தொழில் நடத்தும் இடங்களில் கடந்த ஜூலை மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அசோக் கெலாட் மற்றும் அவரது போட்டியாளர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையில் முன்னதாக அரசியல் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அறிக்கை வெளியிட்ட ராஜஸ்தான் காங்கிரஸ், மத்திய மோடி அரசின் இந்த விசாரணைக்கு எல்லாம் காங்கிரஸ் அஞ்சாது என்று தெரிவித்திருந்தது.
அமலாக்கத் துறையின் இந்த விசாரணையில் கெலாட் மகன் அனுபம் சிக்கியுள்ளார். கடந்த 2007 முதல் 2009ஆம் ஆண்டில் நடந்த வருமான வரித்துறை குற்றச்சாட்டு குறித்தும் அமலாக்கத்துறை தற்போது மறு விசாரணை மேற்கொண்டுவருகிறது. விவசாயிகள் பயன்படுத்தும் எம்ஓபி எனப்படும் உர ஏற்றுமதியில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை தொடர்ந்தது.
இந்த வழக்கு 2013ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஜூன் ஜூலை 13-ஆம் தேதி வருமான வரித்துறை கெலாட்மீது வழக்குப் பதிவு செய்தது. உர மூட்டைகளை சட்டவிரோதமாக கடத்தியது தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
மலேசியா, தைவான் ஆகிய நாடுகளுக்கு உப்பு மூட்டைகள் ஏற்றுமதி என்கிற பெயரில் கெலாட் மற்றும் அவரது மகன் அனுபம் ஆகியோர் இந்திய அரசால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட எம்ஒபி ரசாயன உரங்கள் மூட்டைகளில் அடைத்து சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முதலில் இந்த உரம் சென்று சேர்ந்த பின்னரே எந்த ஒரு உரத் தயாரிப்பு தொழில் நிறுவனமும் இதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது இந்திய அரசின் உத்தரவு. ஆனால் இதனை கெலாட் மீறி உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

உர மூட்டைகளை இந்தியன் பொட்டாஷ் லிமிடெட், இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்கி விவசாயிகளுக்கு விற்கும் இடைநிறுவனமாக கெலாட்டின் நிறுவனம் செயல்பட்டதாகவும் உர மூட்டைகள் அவரது பொறுப்பில் இருந்ததால் அவற்றை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்து அவர் அதிக பணம் ஈட்டியதாகமும் வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    எப்படி பார்த்தாலும் திமுகவின் ஊழலை மிஞ்சுவது கடினம்.....

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    ஊழலுக்கே பெயர் போன காங்கிரசுக்கு இதுவெல்லாம் தூசி போன்றது. இவர்க ளுக்கு நல்ல புத்தி எப்போதுமே வராது

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    இப்ப உடனே ஒரு கும்பல் கிளம்பிடும் "இது பழிவாங்கும் படலம்" என்று கூறிக்கொண்டு...

Advertisement