dinamalar telegram
Advertisement

ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பிற்காக இரண்டு குழுக்கள் அமைப்பு

Share
புதுடில்லி : ஜி.எஸ்.டி., விலக்கு பொருட்களை மறு ஆய்வு செய்யவும், வரி ஏய்ப்புகளை கண்டறியவும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி., அமைப்பின் சீரமைப்பிற்காக இரண்டு குழுக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மாநில அமைச்சர்கள் அடங்கிய அந்த குழுக்களை அமைத்து, மத்திய நிதித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஜி.எஸ்.டி., விகித மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட ஏழு அமைச்சகர்கள் அடங்கிய குழுவுக்கு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமை தாங்க உள்ளார். மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மிஸ்ரா, கேரள நிதி அமைச்சர் பாலகோபால், பீஹார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத், உ.பி., நிதி அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா, கோவா அமைச்சர் மாவின் கோடின்ஹோ ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுஉள்ளனர்.

இதேபோல், ஜி.எஸ்.டி.,யின் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு, மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில், டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், சத்தீஸ்கர் நிதி அமைச்சர் சிங் தியோ, ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, ஆந்திர நிதி அமைச்சர் புக்கானா ராஜேந்திரநாத், அசாம் நிதி அமைச்சர் அஜந்தா நியோக் மற்றும் ஒடிசா நிதி அமைச்சர் நிரஞ்சன் புஜாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  இரத்தின கம்பளம், பட்டு இருக்கை, மயிலிறகு விசிறி எல்லாம் ஏற்பாடு செஞ்சுருங்க.... ஆனை மேல் அம்பாரி வச்சு அழைப்பிதழை அனுப்புங்க... இதுல ஒன்னு குறைஞ்சாலும் எங்க மைனர் கூட்டத்தில் கலந்துக்க மாட்டாரு....

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  என்னது? பச்சா அஜித் பவார் தலைவரு ... டக்ளஸ் வெறும் மெம்பரா? வர வர டக்ளஸ்-னா எல்லாருக்கும் இளப்பமா போச்சு. போகிற போக்கைப் பார்த்தா வளைகாப்பு கிடா வெட்டு போறாது போலிருக்கே? ஏகாதசி, ஷஷ்டி, அமாவாசை-னு திதி வாரியா லீவு எடுக்க வெச்சுடுவாங்களோ? இதை விட ரிஜைன் குட்த்துட்டு வீட்டோட மாப்பிள்ளையா அமேரிக்கா போயிடலாம்.

 • RajanRajan - kerala,இந்தியா

  GST வரி ஏய்ப்பு என்பது இன்னும் தொடர்கதையாக தான் இருக்கிறது. குறிப்பாக சேட்டு கடைகள் இதில் முன்னணி. அதிலும் தமிழகத்திலே எந்த கடையிலும் சாமான் வாங்கினால் அதற்கு பில் கேட்டால் மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு எஸ்டிமேட் சீட்டை தருவான் நாம் மேலும் இறுக்கினாள் உங்களுக்கு GST எண் இருக்குதான்னு கேட்பான். வற்புறுத்தி கேட்டால் ஒரு பில் புக் வச்சிருப்பானுங்க அதிலே கிறுக்கி தந்துடுவானுங்க HSN கோட் இல்லாம தருவான். எனவே எல்லா கடைகளிலும் இப்பெல்லாம் 500 ரூபாய்க்கு மேல் கச்சோடம் ஆகுமோ அங்கெல்லாம் Bபில் கண்டிப்பாக்குங்க. பில் தர மறுக்கும் கடை சம்பந்தமாக ஒரு டோல் ப்ரீ புகார் நம்பர் கொடுங்க. கடைக்கு ஒரு சாமான் வாங்க சென்றாலும் கூட நாம் எம்புட்டு ஏமாத்த படுகிறோம் என்பது ஒரு வாடிக்கையாளரின் புலம்பல். வரி கட்டமைப்பை சீரமைத்து வரி ஏய்ப்பை தவிர்த்தால் அரசு தானாக முன் வந்து நுகர்வோர் பொருட்களின் வரியை குறைக்க முன் வரலாம். விலைவாசி கட்டுப்படும். வரிஏய்ப்பை கடும் அபராதம் விதித்து கட்டு படுத்துங்கள். இன்னும் வே பில் இல்லாமல் பொருட்கள் பரிமாற்றம் வாகனங்கள் மூலம் அரங்கேறுகிறது வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்.

 • ஆரூர் ரங் -

  இவ்வளவு பேர் கூடி கமிட்டி 🤔ஆலோசனை சொன்னாலும் ஒன்று விடாமல் எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே நடைமுறைக்கு🤭 வரும் என்பது சட்டம். டபுள்😉வாட்ச் அறிவாரா?

 • Visu Iyer - chennai,இந்தியா

  சீரமைப்பு செய்கிறார்கள் என்றால் இது வரை சரிஇல்லை என்று தானே பொருள்.. நிதி அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும்.. மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத மத்திய அரசு பதவி விலக வேண்டும்.

Advertisement