dinamalar telegram
Advertisement

3 முகாம்களில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி:வென்று காட்டுவோம், இனி! அனைத்து துறைகளிலும் சாதிக்க வாய்ப்பு

Share
Tamil News
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த, மூன்றா வது சிறப்பு முகாமில், 78 ஆயிரத்து, 262 பேர், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மூன்று வாரங்களாக நடந்த முகாம்களில், மொத்தம், 2 லட்சத்து, 90 ஆயிரத்து, 804 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், 20.77 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நேற்று முன்தின நிலவரப்படி, 14 லட்சத்து, 55 ஆயிரத்து, 387 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்; மூன்று லட்சத்து, 9 ஆயிரத்து, 682 பேர் இரண்டு தவணைகளையும் செலுத்தியுள்ளனர்.மக்களை, கொரோனாவில் இருந்து பாதுகாக்க, மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் சிறப்பு முகாம் நடத்தி, தடுப்பூசி செலுத்த, மாவட்ட நிர்வாகம் திட்ட மிட்டது. ஒவ்வொருவரும், அந்தந்த ஓட்டுச்சாவடியில் மட்டும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

நிபந்தனையை தளர்த்தி, சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. கடந்த 12ம் தேதி முகாமில், 1.23 லட்சத்துக்கு மேற்பட்டோரும், 19ம் தேதி நடந்த இரண்டாவது முகாமில், 89 ஆயிரத்து, 379 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.விடுபட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வசதியாக, மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. 672 மையங்களில் நடந்த முகாம்களில், 80 ஆயிரத்து, 210 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடந்த முகாம்களில், கடந்த முகாம்களில் இல்லாத வகையில், கூட்டம் அதிகம் காணப்பட்டது.மக்கள் சமூக இடைவெளியுடன் சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். குறிப்பாக, பனியன் நிறுவனங்கள் ஏற்பாட்டில், வெளிமாநில தொழிலாளர்களும், தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
கலெக்டர் வினீத், பல்லடம் தாலுகாவில் ஆய்வு மேற்கொண்டார். கணபதிபாளையம்பிரிவு, தெற்குபாளையம், அரசு கல்லுாரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக சேமிப்பு கிடங்குகளில் நடந்த, தடுப்பூசி முகாமை நேரில் ஆய்வு செய்தார்.திருப்பூர் மாநகராட்சியில், 138 சிறப்பு முகாம்களில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மொத்தம், 40 ஆயிரம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மதியம் வரை, தடுப்பூசி செலுத்த வருவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது; தொடர்ந்து, முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வார்டு வாரியாக, மாநகராட்சி பணியாளர்கள், 'மைக்' பிரசாரம் செய்தனர்.முதல் இரண்டு முகாம்களில், இலக்கை தாண்டி, தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் நேற்று, 78 ஆயிரத்து, 262 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மூன்றாவது முகாம், இலக்கைவிட, 2,000 பேர் குறைவாக தடுப்பூசி போட்டுள்ளனர். மூன்று முகாம்களில், மொத்தம், 2 லட்சத்து, 90 ஆயிரத்து, 804 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.தடுப்பூசி செலுத்தியதால், பொதுமக்கள், தொற்று தடுப்பு ஆற்றல் கொண்டவர்களாய் மாறியுள்ளனர். ஏற்கனவே, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள திருப்பூர் மாவட்டம், வேளாண்மை, தொழில் என அனைத்து துறையிலும், இனி வெற்றிப்பாதை நோக்கிப் பயணிக்கும் என்பது உறுதி!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    மற்ற நாட்கள் தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைத்துவிட்டு அனைவரையும் ஒரே நாளில் வர சொல்லி கூட்டத்தை கூட்டி வேதனையை தருவது சாதனை அல்ல. செய்தி தாளகள் ஓவராக அரசுக்கு முட்டு கொடுக்கின்றன. இன்று விடுமுறை யாம் ஒரு வாரத்துக்கு ஊசி போட மாட்டார்கள் அடுத்த மெகா முகாமுக்காக காத்திருக்கவேண்டும்.

Advertisement