dinamalar telegram
Advertisement

இயங்காத முக்கிய சிக்னல்கள் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்

Share
Tamil News
மாதவரம்,-போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையில், இயங்காத 'சிக்னல்'கள் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை மாதவரம் 200 அடி சாலை எனப்படும் ராஜிவ்காந்தி சாலை, வடசென்னை மற்றும் தென்சென்னையை இணைக்கும் போக்குவரத்திற்கு உதவுகிறது.பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு சென்று வரும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், இந்த சாலையைத் தான் பயன்படுத்துகின்றன.

பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கான வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், மாதவரம் முதல் மணலி வரையில் உள்ள, 'சிக்னல்'கள், கடந்த ஒரு மாதமாக இயங்கவில்லை.இதனால் மாதவரம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், வடபெரும்பாக்கம், மாதவரம் பால்பண்ணை, மணலி உள்ளிட்ட சாலை சந்திப்புகளை கடந்து, சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படும் ஆபத்தும் அதிகரித்துஉள்ளது.

இந்த பிரச்னையால், உயிர் காக்கும் அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட விதிவிலக்கின்றி, சாலையைக் கடக்க முடியாமல் காத்திருக்கின்றன.இரவு மற்றும் பலத்த மழை பெய்யும் போதும் நிலைமை மேலும் மோசமாகிறது.அவசரப்பட்டு சாலையைக் கடக்கும் பாதசாரிகள் அல்லது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பலியாகின்றனர்.

இது குறித்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மாதவரம் போக்குவரத்து போலீசாரிடம் பல முறை தெரிவித்தும், அவற்றின் சீரமைப்புக்கு யார் செலவு செய்வது என அலட்சியப்படுத்துகின்றனர்.இதனால், மாதவரம் 200 அடி சாலை சந்திப்புகளை கடப்பவர்கள், பீதியுடனேயே கடக்கின்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement