dinamalar telegram
Advertisement

உள்ளாட்சி தேர்தல்: கமல் இன்று பிரசாரம்

Share
சென்னை : உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரத்தை, கமல் இன்று துவக்குகிறார்.
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரசாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக, அக்கட்சியின் தலைவர் கமல், இன்று முதல் பிரசாரத்தை துவக்க உள்ளார்.
முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரிலிருந்து பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார். அடுத்த கட்டமாக, 30ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரசாரத்தை துவக்குகிறார். இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் நீதி மய்யமும் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில், விவசாய சங்கங்களுடன் மக்கள் நீதி மய்யமும் பங்கேற்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

  • Anand - chennai,இந்தியா

    இந்த தடவை கூட சேர்ந்து பணியாற்றும் மகளிர் அணி தலைவி யாரோ?

  • Milirvan - AKL,நியூ சிலாந்து

    ஆவாது..ஆவாது.. போணியாவாது..நவுரு.. காத்து வரட்டும்..

  • RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்

    பாவம் யாரோ குதிக்குறதை வேடிக்கை பார்க்க வந்தவரை , பொறாமை என்ற நோய் பிடிச்சு தள்ளி உள்ளெ வுட்டுடுச்சு , கரை சேர்ந்தால் சந்தோஸம்

  • raja - Cotonou,பெனின்

    பண்ணை வீட்டுக்கு போய் முன் பணப்பொட்டி வாங்கிட்டார் போல...

  • rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்

    செவப்பு தீயணைப்பு வண்டி பஞ்சாயத்து தேர்தலுக்கு வராது.அது உலக்கை முதல்வராக வர சட்டசபை தேர்தலுக்கு மட்டும். தலைவர் மாட்டுவண்டியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அய்யாக்கண்ணு உடன் பயணம் செய்து கோமணம் கட்டி கிராமத்தில் ஏர் உழுது வாக்கு சேகரிப்பர். தேர்தல் முடித்தவுடன் தோற்ற எல்லோரும் (ஒரு கழிசடை கூட ஜெயிக்காது) தீமூகவில் ஐக்கியமாகி விடுவார்கள். தலைவர் பிக் பாசில் உதார் விட்டுக் கொண்டிருப்பர்.

Advertisement