dinamalar telegram
Advertisement

தேர்வு: உள்ளாட்சித் தேர்தலில் 379 பேர் போட்டியின்றி...5,715 பதவிகளுக்கு 19,982 பேர் நேரடி போட்டி

Share
Tamil News
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 357 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, 5,715 பதவிகளுக்கு 19,982 பேர் நேரடியாக தேர்தல் களத்தில் உள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 15ம் தேதி துவங்கி 22ம் தேதி முடிந்தது. இத்தேர்தலில் போட்டியிட 24 ஆயிரம் பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில், 150 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 23 ஆயிரத்து 850 மனுக்கள் ஏற்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 25ம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இதில், மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 244 மனுக்களில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 242 மனுக்களில் 65 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், 177 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.இதேபோன்று, ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 2,079 வேட்பு மனுக்களில் 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 2,066 மனுக்களில், 697 மனுக்கள் வாபஸ் பெற்றதால், 1,369 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.மேலும், ஊராட்சித் தலைவருக்கு 4,146 வேட்பு மனுக்களில் 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

மீதமுள்ள 4,105 மனுக்களில் 1,381 மனுக்கள் வாபஸ் பெற்றதாலும், 22 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 2,702 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 17 ஆயிரத்து 725 வேட்பு மனுக்களில் 85 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 17 ஆயிரத்து 640 மனுக்களில், 1,549 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இதில், 357 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 15,734 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.இந்நிலையில், மாவட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ள 6,097 பதவிகளில் 379 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதையடுத்து, மீதமுள்ள 5,715 பதவிகளுக்கு 19 ஆயிரத்து 982 பேர் நேரடியாக தேர்தல் களத்தில் உள்ளனர்.

இதற்கிடையே தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதனால், வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினருக்கு ஓட்டு கேட்டு சுவர் விளம்பரத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இரவு, பகல் பார்க்காமல் ஆதரவாளர்களுடன் தீவிர தேர்தல் பிரசாரத்திலும் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தேர்தல் திருவிழா களை கட்டத் துவங்கியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement