dinamalar telegram
Advertisement

இந்தியாவில் தொடர்ந்து குறைகிறது தினசரி கோவிட் பாதிப்பு

Share
புதுடில்லி: இந்தியாவில் மேலும் 28,326 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது, 26 ஆயிரம் பேர் நலமடைந்தனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று 28,326 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,52,745 ஆனது. தற்போது 3,03,476 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், 26,032 பேர் குணமடைந்தனர். இதன் மூலம், கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,29,02,351 ஆக அதிகரித்தது. மேலும் 260 பேர் உயிரிழந்ததால், கோவிட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4,46,918 ஆனது.

நேற்றைய பாதிப்பு, இறந்தவர்கள் எண்ணிக்கையில், கேரளாவில் மட்டும் 16,671 பேர் பாதிக்கப்பட்டனர். 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று 68,42,786 பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம், இதுவரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 85,60,81,527 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement