dinamalar telegram
Advertisement

மழை, தண்ணீர், உரத்தை வைத்து விவசாயம் செய்யுங்கள் என அறிவுரை கூறுவதை விட்டு, போராட வாங்க என அழைப்பது சரியா...

Share
நாளை நடக்கவிருக்கும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் நாடு தழுவிய முழு அடைப்பு, மத்திய அரசின் விவசாய கொள்கைகளுக்கு எதிராக இறுதித்தீர்ப்பு எழுதும் வகையில் இருக்க வேண்டும்.
- தி.மு.க., விவசாய அணி மாநில செயலர் என்.கே.கே.பெரியசாமி

'மழை, தண்ணீர், உரத்தை வைத்து விவசாயம் செய்யுங்கள் என அறிவுரை கூறுவதை விட்டு, போராட வாங்க என அழைப்பது சரியா...' என கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., விவசாய அணி மாநில செயலர் என்.கே.கே.பெரியசாமி அறிக்கை.பாரத ஸ்டேட் வங்கியின் தேர்வுகளில் தொடர்ந்து இட ஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இந்த வங்கியின் சமூக நீதிக்கு எதிரான இத்தகைய போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

- தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன்

'இப்போது, ஒவ்வொரு வங்கியாக பார்த்து, அவற்றை 'கண்டிக்கத்' துவங்கி விட்டீர்களா; தமிழகம் 'முன்னேறிடும்' போங்க...' என, அதிருப்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை.பெண்களுக்கான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிட்டுள்ளது உட்பட பெண்களுக்கான பல திட்டங்களை, தி.மு.க., அரசு புறக்கணித்துள்ளது. இதன் மூலம் பெண்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதி

'நிதி நிலைமை சீரானதும், அ.தி.மு.க., அரசு வழங்கிய அனைத்து சலுகைகளையும் வழங்குவோம் என்கிறதே, தி.மு.க., அரசு...' என, சொல்லத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வளர்மதி பேச்சு.போதைப்பொருள் மற்றும் காதலை வைத்து மத மாற்றம் கேரளாவில் இல்லை என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளது தவறு. அரசியலுக்காக ஒரு சமுதாய தீங்கை கண்டுகொள்ளாமல் விடக் கூடாது. சமூகத்திற்கு தீங்கான ஒன்று தெரியும் போதே, அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
- கேரளா பா.ஜ., - எம்.பி.,யும் நடிகருமான சுரேஷ் கோபி

'நாட்டில் இருக்கும் பெரும்பாலான குற்றங்கள், மோசடிகள், முறைகேடுகளுக்கு இதுபோன்ற, 'மறைப்பு' தான் காரணம்...' என, கூறத் தோன்றும் வகையில், கேரளா பா.ஜ., - எம்.பி.,யும் நடிகருமான சுரேஷ் கோபி பேட்டி.கிராம சபைகளை கண்டு அஞ்சுவதும், ஏதாவது ஒரு காரணம் கூறி அதை நடத்தாமல் இருப்பதிலும், ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல. கொரோனா பெருந்தொற்று இவர்களுக்கு வசதியான காரணமாக போய் விட்டது.
- மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன்

'உங்கள் கட்சி துவங்கி, நான்காண்டுகள் ஆகப் போகின்றன. எத்தனை கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளீர்கள் என, எதிரணியினர் கேட்கின்றனர்...' என, 'போட்டு'க் கொடுக்கத் துாண்டும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை.'அமேசான்' பன்னாட்டு நிறுவனம் இந்தியாவில் சில புதிய முதலீடுகளை செய்வதற்கு முன் ஒரு வழக்கறிஞருக்கு 8,546 கோடி ரூபாய் கட்டணம் கொடுத்ததாக கணக்கு தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கறிஞர் யார்; அவருக்கு அவ்வளவு பெரிய தொகை கொடுக்க யார் காரணம்; என்ன நடக்கிறது இந்த நாட்டில்?
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்

'வக்கீல் கட்டணமே இவ்வளவு என்றால், முதலீடு பல லட்சம் கோடி ரூபாய் இருக்கும் போலிருக்கிறதே... சொல்வது உண்மையாக இருந்தால், விசாரிக்கத் தான் வேண்டும்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.குஜராத்தில் உள்ள முந்த்ரா எனப்படும் பிரபல தொழிலதிபர் அதானியின் துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் ஹெராயின் போதைப்பொருள் சிக்கியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமைதி காப்பது ஏன்?
- காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்

'போதைப்பொருள் விவகாரத்தை பிரதமர், மத்திய அமைச்சர்களுடன் தொடர்பு படுத்துவது தவறு...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அறிக்கை.'பி.எம்., கேர்ஸ்' எனப்படும் நிதி, அரசு நிதியல்ல என்று டில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய பா.ஜ., அரசு தெரிவித்துள்ளது. அறக்கட்டளையின் நிதி என்று கூறப்பட்டுள்ளது. அறக்கட்டளை நிதி அரசுக்கு சொந்தமா; வேறு யாருக்கு சொந்தம்?
- தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் ஏ.கோபண்ணா

'அந்த நிதியை அரசுக்கு தலைமை வகிக்கும் அமைச்சர் அல்லது அதிகாரி நிர்வகிப்பார். அவர்களை நம்பி நாட்டின் கஜானாவையே கொடுத்துள்ளோம்; சில கோடி ரூபாயை நம்பாமல் இருக்கலாமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் ஏ.கோபண்ணா அறிக்கை.எங்கள் கட்சி கொடியேற்றுவதையே ஒரு யுத்தமாக மாற்றுகிறது காவல் துறை. பொது இடத்தில் கொடியேற்றுவதைச் சட்டம்- - ஒழுங்கு பிரச்சினையாக்கும் காவல் துறையின் ஜாதிய அணுகுமுறைக்கு காரணமான அதிகாரிகளை தமிழக அரசு இடைநீக்கம் செய்ய வேண்டும்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

'கொடியேற்றுவது தான் இப்போது முக்கிய பிரச்னையா... படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள்; படிக்க விரும்புவோருக்கு வாய்ப்பு வழங்குங்கள்...' என சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.கொரோனா பரவல் சற்று தணிந்திருந்தாலும், ஆபத்து முற்றாக முடியவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொண்டால், நோயின் வீரியம் குறைகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்கப்படுத்துவதும் நம் கடமை.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்

'அரசியல் கட்சிகளுக்கும் சமூக பணி இருக்கிறது என்பதை தாமதமாக உணர்ந்துள்ளீர்கள் போலிருக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை.Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (23)

 • Aarkay - Pondy,இந்தியா

  போக்குவரத்து இடைஞ்சலாக உள்ள கட்சித்தலைவர் சிலைகளையும், கொடிக்கம்பங்களையும் முதலில் அப்புறப்படுத்தவேண்டும்.

 • PRAKASH.P - chennai,இந்தியா

  Drink tea coffee and eat mixure pokkoda to live..

 • S. Narayanan - Chennai,இந்தியா

  மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் தடுப்பூசி மகத்துவத்தை இவ்வளவு லேட்டாக புரிந்து கொண்டு இருக்கிறார். மகத்துவம் தெரியாமல் காங்கிரஸ் திமுக மற்றும் எல்லா கட்சிகளும் தடுப்பூசிகள் போட்டால் மக்கள் இறந்து விடுவார் என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களுக்கு மத்திய அரசு செய்ய நினைத்த நல்ல விஷயங்களை தடுத்து விட்டதை நினைக்கும் போது இந்த கட்சிகள் நம் நாட்டுக்கு தேவையா என்று மக்கள் நினைக்க தொடங்கி விட்டார்கள். ஜெய்ஹிந்த்.

 • S. Narayanan - Chennai,இந்தியா

  காவல் துறை சார்ந்த அதிகாரிகளை எல்லாம் வீட்டுக்கு அனுப்பி விட்டு திருமாவை காவல் துறை அதிகாரியாக நியமித்து விட்டால் தமிழ் நாடு முழுவதும் கொடி ஏற்றி விடலாம்.

  • Aarkay - Pondy,இந்தியா

   அவரவர் சொந்த இடத்தில கொடிக்கம்பமோ வேறு எந்த கம்பமோ அமைத்துக்கொள்ளலாம். பொது இடம் என்ன கட்சிகளின் சொத்தா கொடிக்கம்பங்களை நிறுவ?

 • S. Narayanan - Chennai,இந்தியா

  எங்கள் திட்டத்தை நாங்கள் எப்போது செய்வோம் என்று நாங்கள் தேதி எதுவும் குறிப்பிட்டு சொல்லவில்லை.. அப்படி இருக்கும் போட்டு தாலிக்கு தங்கம் திட்டம் தங்கம் விலை குறைந்த பின் நிறைவேற்ற படும் என்று ஸ்டாலின் கூறுகிறார்.

Advertisement