dinamalar telegram
Advertisement

சர்வதேச சிலம்ப போட்டி; தமிழக சிறுவன் சாதனை

Share
தாம்பரம் : நேபாளம் நாட்டில் நடந்த சர்வதேச சிலம்பம் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், 19 வயது வாலிபர் ஆகிய இருவர், தங்கம் வென்றனர்.


நேபாளம் தலைநகர் காத்மாண்டு, பெக்ராவில், திறந்தவெளி சர்வதேச சிலம்பம்- போட்டி நடந்தது. இதில், இந்தியா, நேபாளம் உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த சிலம்பம் வீரர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை, காட்டுக் காலனியைச் சேர்ந்த சுரேஷ் மகன் தனுஷ்குமார், 13; திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த மாரி மகன் மணிகண்டன், 19, ஆகிய இருவர் பங்கேற்றனர்.

மொத்தம், 400 பேர் பங்கேற்ற போட்டியில், 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், சிறுவன் தனுஷ்குமார் தங்கம் வென்றார். மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், மணிகண்டனும் தங்கம் வென்றார்.சர்வதேச சிலம்பம் போட்டியில், தமிழகத்தில் இருந்து சென்று இருவரும் தங்கம் வென்று, தமிழகத்திற்கும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும்பெருமை சேர்ந்து உள்ளனர்.



இருவரும், ஏற்கனவே கோவாவில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இருவரும் படப்பையை சேர்ந்த இன்டெர்னல் போர்ஸ் மார்ஷலார்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் தலைமை பயிற்சியாளர் தமிழரசனை, தங்கம் வென்ற மாணவர்களின் பெற்றோர் வெகுவாக பாராட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

  • T R Raja Raja - chennai,இந்தியா

    சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற சிலம்பு வீரர்கள் தனுஷ்குமாருக்கும், மணிகண்டனுக்கும் வாழ்த்துகள் பாராட்டுக்கள்

  • R S BALA - CHENNAI,இந்தியா

    வெற்றி வாகை சூடிய உங்களுக்கு வாழ்த்துக்கள் இளஞ்சிங்கங்களே..

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற சிலம்பு வீரர்கள் தனுஷ்குமாருக்கும், மணிகண்டனுக்கும் வாழ்த்துகள் பாராட்டுக்கள்

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    சிலம்பச் செல்வர்களுக்குப் பாராட்டுகள் - வாழ்த்துகள். தமிழக இளைஞர்களுக்குச் சரியான பயிற்சி அளித்தால் உலகமே அண்ணாந்து பார்க்குமளவுக்கு உயரச் செல்வர் என்பதில் ஐயமில்லை. இங்கே இதற்கு ஒரு பல்கலைக் கழகமே இருக்குதாமே ? அவர்கள் முயற்சிப்பார்களா ?

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம்.

Advertisement