dinamalar telegram
Advertisement

அக்டோபரில் மட்டும் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை

Share
புதுடில்லி: பண்டிகைகள் நிறைந்த அக்., மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுதும் வங்கிகளுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக் கிழமைகளில் முழு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்படி இந்தாண்டு அக்., 9, 23 ஆகிய இரண்டு நாட்களும் முழு விடுமுறை. அக்., 2 சனிக்கிழமையன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை. அக்., 3, 10, 17, 24, 31 ஆகிய ஐந்து நாட்களும் ஞாயிற்றுக் கிழமை. இது தவிர அக்., 14, 15ல் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை. அக்., 19ல் மிலாடி நபி விடுமுறை. மேற்கண்ட 11 நாட்களும் நாடு முழுதும் வங்கிகளுக்கு முழு விடுமுறை. மேலும், 10 நாட்கள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்:
அக்., 1 அரையாண்டு கணக்கு முடிவு சிக்கிம்

அக்., 6 மஹாளய அமாவாசை திரிபுரா, கர்நாடகா, மேற்கு வங்கம்

அக்., 7 மேரா சவுரென் ஹவுபா லெய்னினங்தோ சனமஹி மணிப்பூர்

அக்., 12 மஹா சப்தமி திரிபுரா, கர்நாடகா

அக்., 13 மஹா அஷ்டமி திரிபுரா, ஒடிசா, சிக்கிம், அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்ட்.

அக்., 16 துர்கா பூஜா சிக்கிம்

அக்., 18 கதி பிஹு அசாம்

அக்., 20 மகரிஷி வால்மிகி ஜெயந்தி திரிபுரா, கர்நாடகா, சண்டிகர், மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம்

அக்., 22 மிலாடிநபியை தொடர்ந்து வரும் வெள்ளி ஜம்மு - காஷ்மீர்

அக்.,26 அக்செஷன் டே ஜம்மு - காஷ்மீர்

இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (24)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். பழைய காலம் மாதிரி இப்போது நேரடி வங்கி சேவை குறைந்துவிட்டது. நீங்கள் நாடு முழுதும் உள்ள இரண்டு லட்சம் ATM களில் 24மணி நேரமும் பணம் எடுக்கவும் உங்கள் வீடுகளில் 24மணி நேரமும் ஆன்லைனில் பணபரிவர்த்தனைகள் செய்யவும், பில் பேமெண்ட்கள் செய்யவும், ரயில் விமான பேருந்து டிக்கட்கள் புக்கிங் செய்யவும் மூன்று ஷிப்ட்களில் (24 மணி) பிண்ணனியில் வங்கி ஊழியர்களின் பங்கு இருக்கிறது. இப்போது கிளைகளில் நடப்பது சுமார் 40 சதம் பணிகள் மட்டுமே.

  • PRAKASH.P - chennai,இந்தியா

    Then give holiday to everyone in this country.. poor labour laws

  • R S BALA - CHENNAI,இந்தியா

    வங்கி பற்றிய ஒரு சமீபத்தில் ஒரு மீம்ஸ் படித்தது நினைவுக்கு வருகிறது .. அக்டோபரில் மட்டும் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை:- இதற்கு வாடிக்கையாளரின் மைண்ட் வாய்ஸ் .. என்கிட்ட இருக்குற மினிமம் பாலன்ஸ்யம் எடுத்துகுவ.. லோன் கேட்டாலும் குடுக்கமாட்ட, நீ 365 நாள் விடுமுறை விட்டா கூட எனக்கு கவலை இல்ல ..

  • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

    அப்போ சில மாநிலங்களில் அக்டோபர் மாதத்தை மீதம் இருக்கும் 9 நாளும் சேர்த்து கொடுத்து கோடை விடுமுறை என்று அறிவித்து விடலாம்

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    Come on. Sundays cannot be considered.Ayudha Pooja and Vijayadasmi are a must.Second Saturdays are a luxury for them.October 2 is accep. So they have 2 days extra holidays.Not Ten.

Advertisement