dinamalar telegram
Advertisement

தேசிய மல்லர் கம்பம் போட்டியில் புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பு

Share
Tamil News
புதுச்சேரி : தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டியில், புதுச்சேரி வீரர்கள் 34 பேர் பங்கேற்கின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் தேசிய அளவிலான 36வது மல்லர் கம்பம் போட்டி, இன்று 26ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது.இப்போட்டியில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில், முருங்கப்பாக்கம் சத்தியா அகாடமி, கேலோ இந்தியா மல்லர் கம்ப கழகம், அரியாங்குப்பம் கொம்யூன் மல்லர் கம்ப கழகம், வீர ஆஞ்சநேயர் தற்காப்பு கலை பள்ளி ஆகிய மையங்களை சேர்ந்த 34 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.மாணவ மாணவிகள் உஜ்ஜைனி புறப்பட்டுச் சென்றனர். முனைவர் கணேஷ், பயிற்சியாளர் வைஷ்ணவி ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement