dinamalar telegram
Advertisement

பட்டய கணக்கறிஞர் சார்பில் ரத்த தான முகாம்

Share
Tamil News
சென்னை : இந்திய பட்டய கணக்கறிஞர் கழக தென்னிந்திய மண்டல கவுன்சில் சார்பில், ரத்த தான முகாம் நடந்தது.அடையாறு, மத்திய கைலாஷ், ராஜிவ்காந்தி சாலையில், வி.எச்.எஸ்., மருத்துவமனையில், 'தலசீமியா' நோயால் பாதிக்கப்பட்ட, 200 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.

ஆர்வர்களுக்கு அவ்வப்போது ரத்தம் செலுத்த வேண்டியுள்ளது.அதற்காக, பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ரத்த தானம் செய்து வருகின்றன. இந்திய பட்டயக் கணக்கறிஞர் கழக, தென்னிந்திய மண்டல கவுன்சில் சார்பில் அதன் உறுப்பினர்கள், மாணவர்கள் ஆண்டிற்கு இருமுறை ரத்த தானம் செய்து வருகின்றனர். அக்கழகத்தின், 70ம் ஆண்டை முன்னிட்டு, நேற்று ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. முகாமை, பட்டயக் கணக்கறிஞர் கழக தலைவர் ஜலபதி துவக்கி வைத்தார். மருத்துவமனை மருத்துவ அதிகாரி வரதராஜன் தலைமையிலான குழுவினர் முகாமை நடத்தினர். இதில், 80க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement