dinamalar telegram
Advertisement

கோவிட் சான்றிதழில் பிறந்த தேதி சேர்க்க முடிவு

Share
புதுடில்லி-வெளிநாடுகளுக்கு செல்வோரின் நலன் கருதி, 'கோவின்' இணையதளத்தில் இருந்து பெறும் தடுப்பூசி சான்றிதழில், பிறந்த தேதி குறித்த முழு விபரங்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது
.'கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களை செலுத்தி இருந்தாலும், பிரிட்டனுக்கு வருவோர் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்' என, அந்நாட்டு அரசு அறிவித்தது.கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரித்து பிரிட்டன் அறிவித்தது. எனினும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய விதி திரும்பப் பெறப்படவில்லை.
இதேபோல் கோவின் இணையதளத்தில் இருந்து இந்திய பயணியர் பெறும் தடுப்பூசி சான்றிதழை ஏற்பதிலும் பிரிட்டன் அரசுக்கு தயக்கம் இருந்து வருகிறது.இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கி, கோவின் தடுப்பூசி சான்றிதழில், பிறந்த தேதி குறித்த முழு விபரங்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது வரை, அதில் தடுப்பூசி செலுத்துவோரின் வயது மட்டுமே குறிப்பிடப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் முதல், சான்றிதழில் இந்த விபரங்கள் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    பிறந்த தேதி குறித்த முழு விபரங்களையும் சேர்க்க இபோது தான் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மோடி படத்தை போடுவது என்பதை மருந்து கண்டு பிடிப்பதற்கு முன்பே முடிவு செய்து விட்டோம்

Advertisement