கோவில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்
திருநெல்வேலி-முறைகேடுகளில் ஈடுபட்டு, மீண்டும் பணி மாறுதலில் வந்த வள்ளியூர் கோவில் செயல் அலுவலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2009ல் செயல் அலுவலராக இருந்தவர் வேலுச்சாமி. இவர், கோவில் நிலத்தை மாற்று மதத்தினருக்கு தாரைவார்க்க காரணமாக இருந்தவர். மேலும் இவர் மீது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.இதையடுத்து வேலுச்சாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது தி.மு.க., ஆட்சியில் கோலோச்சும் நெல்லையைச் சேர்ந்த சிலர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனுார் பகவதி அம்மன் கோவிலில் இருந்த வேலுச்சாமியை மீண்டும் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செயல் அலுவலராக மாற்றம் செய்தனர்.
கடந்த ஆக., 11ல் அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து, மீண்டும் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை தாரைவார்க்கும் பணிகளை துவக்கினார். கோவில் பிரகாரத்தில் உள்ள 7 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து, கிறிஸ்துவரான இன்னாசிமுத்து மகள் லில்லி வீடு கட்டியுள்ளார். இதற்கு எதிராக அங்கு செயல் அலுவலராக இருந்த சுபாஷினி வழக்கு தொடர்ந்துள்ளார்.சுபாஷினியை மாற்றிவிட்டு அங்கு வந்த வேலுச்சாமி, தான் பொறுப்பேற்ற நாளிலேயே ஒரு அமைதிக்கூட்டம் நடத்தியதாகவும், நிலத்தை ஆக்கிரமித்துள்ள இன்னாசிமுத்து மகள் லில்லி 2 லட்சம் ரூபாய் செலுத்திவிட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை தேவையில்லை எனவும் வள்ளியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.செயல் அலுவலர் வேலுச்சாமியின் ஒரு சார்பு போக்கினால், இரு மதத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இது குறித்து விசாரணை நடத்திய ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், வேலுச்சாமியை நேற்று முன்தினம் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

குடும்பத்துடன் நீடூழி வாழவேண்டும்