dinamalar telegram
Advertisement

702 ஏசி பஸ்கள் அக்., 1ல் இயக்கம்

Share
சென்னை--அக்டோபர் முதல், தமிழகத்தில் 'ஏசி' பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிக்கை:கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மே 10 முதல் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே, 'ஏசி' பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, மீண்டும் 'ஏசி' பஸ்களை இயக்க, முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

இதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 48 பஸ்கள்; அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், இருக்கை வசதியுள்ள 100 பஸ்கள்; படுக்கை வசதியுள்ள 34 பஸ்கள்; இருக்கை மற்றும் படுக்கை வசதியுள்ள 206 பஸ்கள் என, மொத்தம் 340 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.மேலும், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 314 பஸ்கள் உட்பட மொத்தம் 702 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கடந்த ஐந்து மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த பஸ்கள் நன்கு பராமரிக்கப்பட்டு, கொரோனா தொற்று பரவாத வகையில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளன. என்றாலும், பயணியர் முக கவசம் அணிந்து, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

  • INDIAN Kumar - chennai,இந்தியா

    அரசு பாதி தனியார் மீதி இது தான் சரியான தேர்வு மற்றும் போட்டி

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    December 31 அன்று பேரிச்சம் பழம் வாங்கி போக்குவரத்து துறை புத்தாண்டை கொண்டாடும்.

  • duruvasar - indraprastham,இந்தியா

    "இருக்கை " வசதியோடுள்ள அரசு பஸ்களை அரசு இயக்க முன்வந்திருப்பது வரவேற்க்கப் வேண்டிய விஷயம். 4 மாதத்தில் 700 ஏசி பஸ்கள். உண்மையிலேயே மிகவிரைவாக செயல்படும் விடியல் ஆட்சி என்றால் அது மிகையாகாது ‌.

  • Ram - ottawa,கனடா

    முதலில் அரசு பேருந்து நிறுவனத்தை நடத்துவதை கைவிடவேண்டும் , காலம் காலமாக நஷ்டம்தான் கிடைக்கிறது

    • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

      பொது போக்குவரத்து அனைத்து தரப்பு மக்களுக்காகவும் இயங்குவது ...நஷ்டம் வருவது இயற்கையே . அதற்காகத்தான் அரசு மானியம் தருவது ..தனியார் போக்குவரத்து நிறுவனம் நடத்தினால் லாபநோக்கு மட்டுமே இருக்கும் ..சேவை நோக்கு இருக்காது ....கிராமங்களுக்கு பஸ் வசதி , எளிய கட்டணத்தில் போக்குவரத்து வசதி என்பது கனவாகவே இருக்கும் ...

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    பேருந்து ஒட்டுணர் நடத்துனர்களுக்கு சரியான கழிப்பிட வசதிகள் செய்து கொடுங்க சார்

Advertisement