dinamalar telegram
Advertisement

டவுட் தனபாலு

Share
Tamil News
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து விட்டு, தொழில் முன்னேற்றம் என முதல்வர் ஸ்டாலின் பேசுவது, தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சி. நக்சல், பிரிவினைவாதம், தீவிரவாதம் போன்றவற்றை ஆதரிப்பவர்களை அருகில் வைத்து கொண்டு, விடியல், வளர்ச்சி என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.


'டவுட்' தனபாலு: அ.தி.மு.க., அரசின் கடந்த பத்தாண்டுகளில் எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களையும் தமிழகத்தில் அறிமுகப்படுத்த, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் விடவில்லை. அதனால் மிகப் பெரிய பல ஆலைகள் மூடப்பட்டன; திட்டங்கள் முடங்கின; மக்கள் வேலை இழந்தனர். அதன் பாதிப்பை இப்போது ஆட்சிக்கு வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் உணர்வதால், வளர்ச்சிக்கு முயற்சிக்கிறாரோ என்ற, 'டவுட்' வருகிறது!


எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி
: அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு போடுவது, சோதனை நடத்துவது என்று எவ்வளவு பழி வாங்கினாலும் அஞ்சப் போவதில்லை. மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. முதல்வராக இருந்தபோது, நான் நினைத்திருந்தால் எத்தனையோ வழக்குகளை, தி.மு.க.,வினர் மீது போட்டிருக்கலாம்.


'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதை பார்த்தால், தி.மு.க.,வினரின் முறைகேடுகளை நன்கு அறிந்தும் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. அவர்களை கண்டுக்கொள்ளாமல் இருந்தால், அடுத்து அவர்கள் ஆட்சிக்கு வரும் போது உங்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார் என நினைத்தீர்களோ என்ற டவுட்டும் வருகிறது!அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்
: கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் இருப்பதை அடுத்து, பொருளாதார வளர்ச்சி துவங்கி இருக்கிற நேரத்தில், ௧௦ நாட்களாக, ஆங்காங்கே அன்றாடம் கொலை குற்றங்கள் நிகழ்ந்து வருவது, மிகுந்த வேதனை அளிக்கிறது. சட்டம் - ஒழுங்கை சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோரை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.


'டவுட்' தனபாலு: தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் கொடூர கொலைகளை பார்க்கும் போதும், கொலைகளை செய்யும் கூலிப்படையினர் சில நாட்களிலேயே வெளியே சஜகமாக உலா வருவதை அறியும் போதும், நடுநிலையாளர்கள் நெஞ்சம் பதறுகிறது. கூலிப்படையினரை வெளியே வர விடாத அளவுக்கு சிறை தண்டனை கொடுத்தால், குற்றங்கள் குறையாதோ... 'டவுட்'டுக்கு தமிழக அரசு தான் பதில் சொல்ல வேண்டும்!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    எப்படியும் நாம் இரு கட்சிகளும் அங்காளி பங்காளிதானே, பத்து வருஷம் நான் தின்னேன், அடுத்து நீ தின்னு மக்களை முட்டாளாக்க, அவரைப் பிடித்தோம், இவரிடம் ரெயிடு விட்டோம் என்று சொல்லிக்கொண்டு ஆஹா, இதுவல்லவோ நேர்மை என்று வியக்க வைத்துவிடுவோம். இதெல்லாம் புதிதல்லவே நமக்கு பாவம், அமலாக்கம், லஞ்ச ஒழிப்பு, வ. வரி என்று சம்பளம் வாங்குபவர்களுக்கும் வேலை ஏதாவது கொடுக்க வேண்டாமா ?

  • M Ramachandran - Chennai,இந்தியா

    அது தான் தீய மு க்கா வின் ஸ்டைலே. எதை எதிர்கிறார்களோர் அதையென ஆட்சிக்கு வந்ததும் நடைமுறை படுத்துவார்கள். இதை பார்த்து திரு மா திரு திரு என்று முளிப்பார்.சைக்கோ கைகொட்டி ரசிப்பார்.

Advertisement