dinamalar telegram
Advertisement

காப்பி அடிக்க கடினமான படம்: பிரதமரை சீண்டும் காங்கிரஸ்!

Share
புதுடில்லி: குவாட் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள மோடி, விமான பயணத்திலும் கோப்புகளை பார்க்கும் ஒரு படத்தை வெளியிட்டார். அது பாராட்டையும், விமர்சனத்தையும் பெற்றது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் ஏர் இந்தியா விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த படத்தை பதிவிட்டு, 'காப்பியடிக்க கடினமான படம்' என கூறியுள்ளது.

நேற்று (செப்.,22) டில்லியில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, வாஷிங்டன் சென்றடைந்தார். விமானப் பயணம் சுமார் 15 மணி நேரம் ஆகும். அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சில கோப்புகளை கையோடு எடுத்துச் சென்று அவற்றை பார்த்தார். அந்த புகைப்படத்தை தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து, “நீண்ட விமானப் பயணம் என்பது சில கோப்புகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளையும் குறிக்கிறது,” என குறிப்பிட்டிருந்தார்.
இப்படம் வெளியான சில மணி நேரங்களில் 13 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. “இத்தகைய பிரதமரை நாடு பெற்றிருப்பது மகிழ்ச்சி” என்கிற ரீதியில் சிலரும், “பிரதமரைப் போல் புகைப்படக்கலைஞரும் விமானத்தில் வேலை பார்க்கிறார்,” என சிலரும் விமர்சித்து மீம்கள், கருத்துக்கள் பதிவிட்டிருந்தனர்.

பிரதமரின் புகைப்படம் வைரலானதை கண்ட காங்கிரஸ் கட்சி அதற்கு பதிலடி தரும் வகையில் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விமானப் பயண செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய படங்களை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏர் இந்தியா ஒன் விமானத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.


சிலர் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் விமானத்தில் கோப்புகளை கையாளும் படங்களை பகிர்ந்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரனும் காங்., கட்சி நிர்வாகியுமான விபாகர் சாஸ்திரி, தனது தாத்தா விமானத்தில் கோப்புகளை பார்த்த படத்தை வெளியிட்டுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (61)

 • இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா

  இனி அடுத்த முறை நம்ம சுடலை டெல்லி செல்லும்போது ஒரு போட்டோ எடுத்து போட்டு விடுவாங்க - RS பாரதி மீடியா அதை ட்ரெண்டிங்லே கொண்டு போகும்

 • Naviran - Bangalore,இந்தியா

  நீங்களும் அரசாங்க செலவில் பத்திரிகையாளர்களுக்கு பலவித சௌகரியங்களுடன் அழைத்து சென்றால் விமானத்தில் சந்திப்பு நடத்தலாம் பர்கா தத் போன்றவர்கள் சௌகரியமான கேளிவிகளை கேட்பார்கள் உங்கள் அரசாங்கம் எவ்வாறு சிறப்பாக செயல் படுகிறது என்கிற பிம்பம் உருவாக்க கொடுத்த கூலிக்கு கூவுவார்கள் அவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் இப்போது அதை எல்லாம் புடிங்கய்ய பிறகு எப்படி இருக்கிறார்கள நடந்து கொள்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம் நடு நிலை பத்திரிகை என்று ஒன்று இருக்கிறதா தமிழ் நாட்டில் எடப்பாடி இடம் கேட்கும் கேள்விகள் ஸ்டாலின் இடம் கேட்கப்படுகிறதா அல்லது ஜெயா விடம் , கேட்கப்பட்டதா தேவை இல்லாத செலவு என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கும் அவரவர்களுக்கு ரிப்போர்ட் தருவதற்கு என்று ஆட்கள் அந்தந்த நாட்டிலேயே நிருபர்கள் இருக்கும்போது

 • sankar - chennai,இந்தியா

  இது மிகவும் பிசியாக உள்ள , பதவியில் இல்லாத பல மனிதர்கள் சாதாரணமாக பயணம் செய்யும்போது பைலை பார்ப்பது வழக்கம் தானே

 • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

  நம்மவா எப்போவுமே போட்டோஷாப் தான்.. காப்பி கூட அடிப்பா...இந்த புத்தம் புது விமானத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு எப்போவாது ஒரு முறையாவது வெப்பாளா? வெறும் போட்டோல மக்கள் நலன் பத்தி யோசிக்கறது எல்லாம் இவா மட்டும் தான் செய்வா..

 • Sathyanarayanan Sathyasekaren -

  0...........

Advertisement