dinamalar telegram
Advertisement

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு: ஸ்டாலின்

Share
சென்னை: தமிழகத்தில் ஏற்றுமதியை ஊக்குவிக்க, ‛‛மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று(செப்.22) நடந்த 'ஏற்றுமதியில் ஏற்றம்; முன்னணியில் தமிழ்நாடு' என்ற மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதன்படி தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் நிதித்துறை, வேளாண் துறை, கால்நடைத்துறை, தொழில்துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள்.

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி தலைவருக்கு அறிக்கை அளிக்கும். மேலும், குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (14)

 • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

  இன்னும் இந்த பெயர்சூட்டு விழா முடியிலையா?

 • Aarkay - Pondy,இந்தியா

  டாஸ்மாக் சரக்கு வேண்டுமானால் ஏற்றுமதி செய்யலாம். எதெற்கெடுத்தாலும் கொடிபிடிக்கும் ஆமைகள் நிறைந்த நாட்டில், உற்பத்தியாவது, ஏற்றுமதியாவது ஒரே தமாசு

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  நல்ல வேளை அமைச்சர்கள் யாரும் இக்குழுவில் இடம் பெறவில்லை.....தலைமை செயலருக்கு இப்படிப்பட்ட பொறுப்பு கொடுத்திருப்பது நல்லதுதான்.....குறுகிய காலத்தில் அரசின் நம்பிக்கையை சம்பாதித்திருக்கிறார் என்று தெரிகிறது......

 • elakkumanan - Naifaru,மாலத்தீவு

  அவ்ளோதான்.........ஏற்றுமதி மேம்பாட்டு கலக்கம் ஏற்படுத்தியாச்சு............ரெண்டு மூணு மாசத்தில் எழுபது லச்சம் கொடிகளை தாண்டி போய்டும்...நம்ம தலை போயி பிரேக் போட்டு நிப்பாட்டி வைப்பார்....அதுக்கு அப்பொறம் வளர்ச்சி அடுத்த தேர்தலுக்கு பிறகு................சாராயம் ஏற்றுமதி தவிர................ஒன்னியுமே இல்லை....யூஸ் அண்ட் த்ரோ கப் மற்றும் தண்ணி பாக்கெட் கூட ஏற்றுமதி பண்ணலாம்..............தினம் தினம் அறிக்கை விட்டு பிழைப்பு நடக்குது....கோவையில் ஏற்றுமதி பொருட்கள் விமான வசதியின்றி தேங்கியிருக்கு...........அதை கவனிக்காம, சிலை வைக்கிறது, கோயிலில் திருக்குறள் சொல்லி தருவது, ..............யோவ்.............இவர்களால் நடந்த நல்லவிசயம் என்றால், ஒவொரு ஐந்து ஆண்டு ஆட்சிக்கும் இடையே பத்து அல்லது பதினைந்து ஆண்டு வனவாசம் செல்வதுதான்.............வேறொன்றும் இதுவரை இல்லை....சொந்த வளர்ச்சியைத்தவிர மக்களுக்கு கடன் வளர்ச்சி இனாம் .................அவ்ளோதான்...

 • Mohan - Thanjavur ,இந்தியா

  தமிழகத்தில் ஏற்றுமதியை ஊக்குவிக்க, கரெக்ட், இப்போ உள்ள ஏற்றுமதியாளர்கள் 4வருஷத்தில் ஊக்கு விக்க தள்ளப்படுவார்கள். பொது மக்கள் நாங்க இருக்கோம் சம்பளம் கொடுக்க.எத்தனை குழு வேண்டுமானாலும் வச்சுக்கோங்க.

  • sridhar - Chennai,இந்தியா

   ஏன் ஊக்கு விக்காணும் , பென்சில் வித்தா அதிக பணம் வருமே .

Advertisement