dinamalar telegram
Advertisement

18 வயதுக்கு மேற்பட்டோரில் 66% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டனர்

Share
புதுடில்லி: இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் 66 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரம் பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டதில் பெரும்பாலானோர் மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கடந்த வாரம் தொற்று உறுதியான 62.73 சதவீதம் பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.தொடர்ந்து 12வது வாரமாக, வாரந்தோறும் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் விகிதம் 3 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. குணமடைபவர்களின் விகிதம் 97.8 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 66 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டு உள்ளது. அதில், 23 சதவீதம் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனை படைக்கப்படுவதற்கு, சில மாநிலங்கள் செய்த சிறப்பான பணிகளே காரணம்.

தாத்ரா நாகர் ஹவேலி, கேரளா, லடாக் மற்றும் உத்தர்கண்டில் 90 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஹிமாச்சல், அந்தமான், கோவா, சண்டிகரில் 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    செங்கல்பட்டில் வூசி தயாரிச்சி இந்தியா மற்றும் உலகுக்கே விடியல் தந்த யேசப்பாவின் சீடர் ஸ்டாலின் வாழ்க

Advertisement