ADVERTISEMENT
ஜம்மு காஷ்மீர்: இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை துணை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தியா- பாக்., எல்லையான ஜம்முகாஷ்மீருக்குள் அவ்வப்போது பயங்கரவாதிகள் நுழைந்து இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதேபோல், இந்திய - பாகிஸ்தான் எல்லையான உரி அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இன்று அதிகாலை 3 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதுகுறித்த ரகசிய தகவல் ராணுவத்துக்கு கிடைத்தது. உடனடியாக பயங்கரவாதிகள் நுழைந்த பகுதியை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே தெரிவித்ததாவது: கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து அதிநவீன இயந்திர துப்பாக்கிகள், சக்திவாய்ந்த வெடி பொருட்கள், கையெறி குண்டுகள் போன்றவை கைப்பற்றப்பட்டது. இதன் மூலம் ஜம்முகாஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் நுழைந்து சதித்திட்டத்தில் ஈடுபடுவது தடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
What is ing by police and what is murdering by terrorists are they not different You call both "kolai in Tamil.Only murder by criminal is "kolai"